நானும் ரத்தத்தைத் தொட்டு எழுதறேன், எழுதறேன்... நான் எடுத்த ரத்தத்தைவிட, லிட்டர் கணக்குல ரத்தம் லீக் ஆகுது. ரெண்டு நிமிஷத்துல ரத்தத்தைப் பார்த்துக்கிட்டே அவன் மயக்கம் ஆயிட்டான். அப்புறம் அடிச்சுப் பிடிச்சு ஹாஸ்பிட்டலில் சேர்த்தேன். வேற யாரு அவனுக்கு ரத்தம் கொடுக்கிறது? நான்தான் அவனுக்கு ரத்தம் கொடுத்தேன். போன ரத்தத் தைவிட, எடுத்த ரத்தம் அதிகமோன்னு கவலைப்பட்டு யோசிக்கிற அளவுக்கு ரத்தம் எடுத்துட்டாங்க.
இதுல க்ளைமாக்ஸ் என்னன்னா, எந்தப் பொண்ணை அவன் லவ் பண்ணினானோ... அந்தப் பொண்ணுக்கு மேட்டர் தெரிஞ்சுபோச்சு. நேரா அந்தப் பொண்ணு அடுத்த நாள் என்கிட்டே வந்துச்சு. 'சந்தானம், யு ஆர் கிரேட். இந்தக் காலத்துல நண்பனுக்காக யார் இவ்வளவு தியாகம் பண்ணுவாங்க? லவ் பண்ண ஐடியா தானம் பண்ணினதோட, ரத்த தானமும் பண்றியே'ன்னு கன்னாபின்னான்னு புகழ ஆரம்பிச்சு, கடைசியில 'ஐ லவ் யூ சந்தானம்'னு முடிச்சது. ஆஹா, என்னடா ஹிஸ்டரி ரிவர்ஸ் கியர் போட்டு ஓடுதுன்னு ஷாக் ஆகிட்டேன். ஹாஸ்பிடல்ல இருந்து திரும்பின ஃப்ரெண்ட் முதல் காரியமா செஞ்ச வேலை... என் ஃப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணினதுதான்.
இப்படி காதலுக்கு உதவப்போய் ஆப்படிச்ச பின்னாலும் விட்டேனா நான்? அதே பாலிடெக் னிக்ல இன்னொருத்தன் டைரக்டா செகண்ட் இயர் சேர்ந்தான். அவன் கையில பெரிசா 'லி'னு எழுதி இருக்கும். என்னன்னா... முதல்ல படிச்ச பாலிடெக்னிக்ல ஃபர்ஸ்ட் இயர்ல லலிதாங்கிற பொண்ணைக் காதலிச்சு இருக்கான். அந்தப் பொண்ணு வழக்கம்போல, 'நீங்க எனக்கு அண்ணன் மாதிரி'ன்னு அரை கிலோ அல்வா கொடுத்துடுச்சு. இங்க வந்தவன் சும்மா இருந்தானா... வந்த தும்... எங்க கிளாஸ்ல இருந்த பொண்ணை டாவடிக்க ஆரம்பிச்சிட்டான். அந்தப் பொண்ணு பேரு இந்திரா. ஆனா, அந்தப் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ண பெரிய தடையா இருந்தது அவனோட காதல் சின்னம். கையில 'லி' னு எழுதிட்டு இந்திராவை எப்படி லவ் பண்ண முடியும்?
என்கிட்டே அவன் பிரச்னையைச் சொன்னதும், 'இது ஒரு பிராப்ளமா, முதல்ல பீடி வாங்குடா'ன்னேன். அவனும் எதுக்குன்னு புரியாம ஒரு கட்டு பீடி வாங்கிட்டு வந்தான். ஒரு பீடியைப் பத்தவெச்சு ரெண்டு இழுப்பு இழுத்துட்டு, 'கையக் காட்டுடா'ன்னேன். 'என்னடா பண்ணப் போறே?'னு மெர்சலா மிரண்டுபோய்க் கேட்டான். 'ஒண்ணுமில்லை... இந்த லி-ஐப் பீடியால சுட்டு 'மி' ஆக்கப் போறேன்'னேன். 'ஐயையோ... அது என் காதல் சின்னம்'னு அலறினான். 'டேய்ய்ய்... ஷாஜகானே இன்னிக்கு இருந்தா... தாஜ்மகாலை வாடகைக்கு விட்டுட்டு, தாஜ் ஹோட்டல்ல ரூம் போட்டு சரக்கு அடிச்சிக்கிட்டு இருப்பாரு'ன்னு ரெண்டு அதட்டு அதட்டி பீடியால சுட்டு, லி-க்கு மேல ஒரு கோடு, கீழே ஒரு கோடு போட்டு மி ஆக்கிட்டேன். அவனும் ஆசை ஆசையாப் போய் இந்திராகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லி இருக்கான். 'உன்னை லவ் பண்றதுல ஒண்ணும் பிரச்னை இல்ல. ஆனா, ஏற்கெனவே நான் இன்னொருத்தரை லவ் பண்றேனே, என்னா பண்றது?'னு கேட்டிருக்கு அந்தப் பொண்ணு.
இந்திராகிட்ட லவ்வைச் சொல்லி 'நொந்திரா' ஆனவன், நேரா என்கிட்ட வந்தான். 'ஏன்டா, ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடி, அந்தப் பொண்ணு ஏற்கெனவே லவ் பண்ணுதா இல்லையான்னு பார்க்க மாட்டீங்களா?'ன்னு திட்டிட்டு, 'மச்சி, ஒரு பீடி சொல்லேன்'னேன். 'இப்ப எதுக்குடா பீடி?'ன்னு முழிச்சுக்கிட்டே |