வெளிநாடுகளைப் பார்க்கும்போது எல்லாம் 'இந்தியாவில் என்ன வளம் இல்லை?
இருந்தும், ஏன் இவ்வளவு பின்தங்கி இருக்கிறது?' என்ற கேள்வி எனக்குள் எழும். குறிப்பாக, நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் சிங்கப்பூர், சொர்க்கலோகத்தைப்போல் இருக்க, இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? அதிலும் தமிழகத்தில் உள்ள சேரி களை நினைத்தால், உள்ளம் நடுங்கும். உலகில் சேரிகள் அதிகம் உள்ள நகரங்களில், சென்னை இரண்டாவது இடம் என்கிறார் கள். முதலிடம் மும்பையாக இருக்கலாம். இதுபற்றிக் கேட்டால், 'சிங்கப்பூர் சின்ன ஊர். அதனால் அது சாத்தியம்!' என்கிறார் கள். இல்லை! முழுக்க முழுக்க சிங்கப்பூர் அரசு தான் அதற்குக் காரணம். அரசு போடும்ஒவ்வொரு திட்டமும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே தீட்டப்படுகிறது. இதற்கும் ஒரு விளக்கம் சொல் கிறார்கள். சிங்கப்பூரின் சர்வாதிகார ஆட்சிதான் காரணமாம். நம் ஊரில் மட்டும் ஜனநாயகமா வாழ்கிறது? இங்கே கருணாநிதியைக் கூட எதிர்த்து எழுதலாம். ஆனால், லோக்கல் கவுன்சிலரை எதிர்த்து எழுதினால், வீட்டுக்கு ஆட்டோ வரும். ஒவ்வொரு கவுன்சிலரும் இங்கே குறுநில மன்னர்களைப்போல் வாழ்கிறார்கள். அரசியலிலும் அதிகார வர்க்கத்திலும் மலிந்துள்ள ஊழல்தான் இந்த நாட்டின் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம்.
சென்ற ஆண்டு சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கே சில காலம் எந்த வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தேன். ஒரு தேசத்துக்குப் போனால், அங்கு உள்ள தமிழர்களையோ, தமிழ் எழுத்தாளர்களையோ பார்ப்பதைவிட, அந்த ஊர் மனிதர்களைச் சந்திப்பதே என் வழக்கம். அப்படி சுற்றிக்கொண்டு இருந்தபோது சிங்கப் பூரின் அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்று கவனித்தேன். அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உதாரணமாக, நான் அமெரிக்காவில் ஒரு கம்பெனி வைத்திருக்கிறேன் (சும்மா பேச்சுக்கு). அதன் பெயரில் ஒரு கோடி டாலருக்கு சீனாவில் இருந்து பொருட்களை இறக்கு மதி செய்கிறேன் என்றால், அமெரிக்க அரசுக்கு நான் 35 லட்சம் டாலருக்கு மேல் வரி கட்ட வேண்டும். அதாவது, 35 சதவிகிதம். ஆனால், இதே கம்பெனியை நான் சிங்கப்பூரில் துவக்கினால், ஒரு பைசாகூட வரி கட்ட வேண்டாம். அதுவும் பல வருடங்களுக்கு. ஒரே விஷயம், சிங்கப்பூர்வாசிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதன் பெயர் தேச பக்தியா? அல்லது, காமன்வெல்த் போட்டி பெயரைச் சொல்லி சுருட்டியது தேச பக்தியா? நம் ஊர் அரசியல்வாதி என்ன சொல்கிறார்? 'எனக்கு 30 சதவிகிதம் வெட்டு. அரசாங்கத்துக்கு 5 சதவிகிதம். சாமான்கள் எந்த கதியில் இருந்தாலும் பரவாயில்லை. ரொம்ப மோசமாக இருந்தால், அதற்குத் தனியாக பர்சன்டேஜ் உண்டு. அதைப் பிறகுபேசிக் கொள்ளலாம்!' சரி, மக்களுக்கு? ம்ஹூம்; தேவை இல்லை. தேர்தல் சமயத்தில் ஒரு ஓட் டுக்கு |