பொதுவாக, ஆண் விலங்குகள் அனைத்துக்கும், இனப்பெருக்க உறுப்புக்குள் பாக்குலம் (baculum) என்ற ஓர்எலும்பு இருக்கும். இந்த எலும்புதான் விறைப்புத் தன்மையை நீட்டிக்க உதவுகிறது. சிம் பன்சி மாதிரியான நம் நெருங்கியஉறவுக் கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது. ஆனால், மனித ஆண் களுக்கு மட்டும் பாக்குலம் இல்லை. ஏன்? பல நூற்றாண்டுகளாக, பல தலை முறைகளாக மனிதப் பெண், பாக்குலம் இல்லாத ஆண்களாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததில்... கடைசியில் மனித ஆண், பாக்குலம் இல்லாதவனாகவே போய்விட்டான். எலும்பின் உபயத்தால் விறைப்பு ஏற்படுவதைவிட, எலும்பேஇல்லாதபோதும் விறைப்புடன் இயங்குவதுதான் நிஜ வீரியத்தின்
வெளிப்பாடு. அதனால் மனிதப் பெண்கள் எல்லோரும் எலும்பு இல்லாத ஆண்க ளுடன் கூடி, அவர்களின் தரத்தை வித்தி யாசப்படுத்த ஆரம்பித்தனர். ஆணும் காலப்போக்கில் அது இல்லாமலேயே விறைப்புறும் தன்மையைப் பெற்றான்.
ஆண் விலங்குகளுக்கு பாக்குலம் இருப்பதில் ஒரு மிகப் பெரிய சௌகர்யம் இருந்தது. உதாரணத்துக்கு, நாயை எடுத்துக்கொள்வோம். ஆண் நாய், பெண்ணுடன் கூடிய பிறகும், கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அந்தப் பெண்ணை விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். காரணம், பெண் நாய்க்கு ஒரே சமயத்தில் ஏழெட்டு கரு முட்டைகள் உற்பத்தி ஆகும். ஒரு ஆணுடன் சேர்ந்த பிறகு, உடனே அது இன்னொரு ஆணுடன் உறவுகொண்டுவிட்டால், அந்த இரண்டாவது ஆணின் விந்தணுக்கள் சில கருமுட்டைகளோடு கலந்துவிட முடியும். இன்னொருத்தனின் மரபணுக்கள் பரவிவிட்டால், தன் சந்ததியினருக்குப் போட்டி ஆகிவிடுமே என்றுதான், கிட்டத்தட்ட அரை மணி நேரம் பெண்ணைப் பிடித்துக்கொண்டே இருக்கிறது ஆண். இந்த அவகாசத்துக்குள் எல்லா கருமுட்டைகளையும் தன் விந்தணுக்களே அபகரித்துவிடும் என்பதுதான் ஆண் நாயின் கணக்கு.
|