இப்படி அவரைக் கட்டி மேய்க்கிறதுக்குள்ள எங்களுக்கு நுரை தள்ளி, டப்பா வெந்து, புட்டிப் பால் கக்கிடுவோம். ஒருநாள் 30 டேக் வாங்கிட்டு, கம்பாத் தெம்பா நிக்குறாரு மனோகர். ராம்பாலா டென்ஷனாகி, 'மனோகர், இன்னும் ஒரு டேக் வாங்கினே, எனக்கு பி.பி வந்து செத்துடுவே'ங்கிறாரு. மனோகர் அசால்ட்டா, எங்க பக்கம் திரும்பி, 'செத்துடுவாவாவாவாவாராம்ம்ம்பா... சும்மா சொல்றாரு'ன்னாரே பார்க்கலாம்!
ரொம்ப நாள் கழிச்சு, அன்னிக்குக் கார்ல போய்ட்டு இருக்கும்போது, மனுஷன் ஸ்கூல் பையன் கணக்கா பஸ் ஸ்டாப்ல கையைக் கட்டிட்டு நின்னுட்டு இருக்காரு. 'அட! நம்ம மனோகர் சார். போற வழியில டிராப் பண்ணிடலாம்'னு நினைச்சு காரை விட்டுக் கீழே இறங்கி, கையைக் காட்டி, 'வாங்க சார்'ங்கிறேன். அவரு, 'சரிப்பா சரிப்பா சந்தானம்... நல்லா இரு'ன்னு அங்கே இருந்தே கையைக் காட்டி, பஸ் ஸ்டாப்ல இருந்து ஆசீர் வாதம் பண்றாரு. கடுப்புல கார்ல ஏறிக் கிளம்பிட்டேன். ஷூட்டிங்குக்கு வேற லேட் ஆயிட்டு இருந்தது. மறுநாள் மனசு கேக்காம மனோகர் செல்லுக்கு போன் போட்டா, ஒரு லேடீஸ் குரல் 'ஹலோ'ன் னுச்சு. 'நம்ம மனோகர் வீட்டுல இருக்கிறவங்க குரல் மாதிரி தெரியலையே'ன்னு சந்தேகத்தோடவே 'மனோகர் இருக்காரா?'ன்னு கேட்டேன். 'நான் பக்கத்து வீட்ல இருந்து பேசறேன். மனோகர் வெளியே போயிருக்காரு'ன்னாங்க. எனக்கு ஒண்ணும் புரியலை.
மறுநாள் நேராவே போய் மனோகரைப் பிடிச்சிட்டேன். 'என்னப்பா, உங்களைப் பிடிக்கவே முடியலை. போன் பண்ணினா பக்கத்து வீட்டு லேடீஸ் பேசுறாங்க'ன்னேன். அதுக்கு அவர் சொன்ன பதில், ஈரத் துண்டைக் கட்டிக்கிட்டு கரன்ட் கம்பியில கைவெச்ச மாதிரி ஆயிருச்சு. நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியே போனா, கதவைப் பூட்டி சாவியைப் பக்கத்து வீட்ல கொடுத்துட்டு, 'யாராவது வந்தா, ஆள் இல்லைன்னு சொல்லிடுங்க'ன்னு சொல்லிட்டு, செல்போனை பாக்கெட்ல போட்டுட்டுப் போவோம்தானே! ஆனா, இந்த மனுஷன் வீட்டைப் பூட்டி சாவியைப் பாக்கெட்ல போட்டுக்கிட்டு, செல்போனைப் பக்கத்து வீட்டுல கொடுத்துட்டுப் போயிடுவாராம்! 'ஆமாஆஆம்பா, யாராவது போஓ ஓஒன் பண்ணினா, ஆள் இல்லைன்னா யாஆஆர் சொல்றது?'ங்கிறாரு!
|