ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

ஊழலும் லஞ்சமும்

தலையங்கம்

கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் நாடெங்கிலும் இப்போது மாபெரும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கட்டடங்கள், ஆலைகள், சாலைகள், அணைக்கட்டுகள் என்று மும்முரமாகத் திட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் தறுவாயில் எவ்வளவோ கண்டிராக்டுகள், லைசென்சுகள், கோட்டா, கொடுக்கல் வாங்கல்கள் போன்ற பெரும் தொகை சம்பந்தப்பட்ட பேரங்களை சர்க்கார் அதிகாரிகள் நடத்த வேண்டியிருக்கிறது. சர்க்கார் இயந்திரத்திலுள்ள எல்லோருமே நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் சின்ன மாக விளங்குபவர்களாக இருக்கமுடியுமா? ஓரளவு ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களைக்கூட, மனத்தைக் கலைத்துக் கை நீட்ட வைக்கும் திறமை, கொள்ளை லாபமே குறியாகக்கொண்ட கண்டிராக்டர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உண்டு.

எனவேதான், நிர்வாக இயந்திரத்தில் பொதுவாக லஞ்சமும், ஊழலும் இன்று அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால், இந்தக் குறைபாட்டை அடியோடு அகற்றுவதற்கு, இப்போதிருக்கும் சட்டங்களும் சர்க்கார் விதிமுறைகளும் போதவில்லை.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த ஊழல் பேரங்கள் சர்க்கார் சொத்து சம்பந்தப்பட்டவை. ஆகவே, நேரடியாக யாருக்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை. இம்மாதிரி குற்றங்கள் பற்றி அறிந்தவர்கள் பொதுநல உணர்ச்சியால் உந்தப்பட்டாலும், அதைப்பற்றி அவர்கள் யாரிடம் புகார் செய்வது? மேலேயுள்ளவர்களே குற்றவாளிக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ, தகவல் கொடுத்தால் பின் னால் அதை நிரூபிக்கப் போதிய சாட்சியமில்லாமல் போய், தாங்களே சங்கடத்துக்குள்ளாக நேருமோ என்ற கவலையே இவர்களைத் தயங்கச் செய்கிறது. அதோடு, அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும், பூர்வாங்க விசாரணை, இலாகா விசாரணை, பொது விசாரணை, பிறகு கோர்ட்டு விசாரணை, மேல் கோர்ட்டு அப்பீல் என்று ஒரு வழக்கு முடிவு பெறுவதற்குள் ஆண்டுகள் பல கடந்துவிடுகின்றன.

இக்குறைபாடுகளையெல்லாம் நன்கறிந்துதான், அமைச்சர்கள்மீதும் அதிகாரத்தில் உள்ளவர்கள் மீதும் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ஒரு நிரந்தரக் குழு தனியாக அமைக்கப்பட வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆகவே, அடுத்த காரியக்கமிட்டி கூட்டத்திலாவது இந்த விசாரணைக் குழு அமைக்கும் யோசனை யைப் பாரபட்சமின்றி ஆராய்ந்து பார்த்து, நாட்டில் ஊழலும், லஞ்சமும் குறையத் தலைவர்கள் வழி செய்ய வேண்டும்.

தலையங்கம்
தலையங்கம்