இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, தின இதழ்களில், இருவரின் கூட்டு அறிக்கையைப் பெரிய அளவில் விளம்பரமாக வெளிவரச் செய்தார். இந்த விளம்பரச் செலவுகூட கலைவாணர் கைப்பொறுப்பிலாகும்.
நாட்டை விட்டு மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உடையவராயிருந்தார் கலைவாணர். இதைப் பகிரங்கமாக உலகமறிய, 'நல்ல தம்பி' படத்தில் வரும் 'இந்திர சபா' தெருக் கூத்தில் சிறப்பாகப் பாடி, நடித்து தெளிவுபடக் காட்டியிருக்கிறார். அவரை விடவும் யாரும் மதுவின் தீமைகளையும், அது ஒழிக்கப்பட்டால் ஏற்படக் கூடிய நன்மைகளையும், பாமரர் முதல் பண்டிதர் வரை சகலரும் உணரும்வண்ணம் விளக்கிக் காட்டியிருக்க முடியாது.
'தாய்க்குப் பின் தாரம்' படக் கதை, தயாரிப்பு போன்ற விஷயங் களில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக் கும் பெரும் கருத்து வேற்றுமை ஏற்பட, படப்பிடிப்பு தொடர்ந்து வளராமல் நின்றுவிட்டது.
அந்த சமயத்தில் தேவர், நஷ்டங்களைத் தாங்கக்கூடிய நிலையில் இல்லை. கொள்கை மற்றும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக் காத மனப்பான்மை கொண்டவர் எம்.ஜி.ஆர். எவர் சொன்னாலும் தன் நிலையிலிருந்து இறங்கமாட் டார். தேவரின் சிரமமான நிலை யைக் கண்டு, துணிந்து எம்.ஜி.ஆரு டன் பேசி, சமாதானப்படுத்திப் படப்பிடிப்புக்கு நாட்கள் வாங்கிக் கொடுத்தார் கலைவாணர்.
- 'கலைவாணர் வாழ்வில்' என்ற நூலிலிருந்து...
|