துணை ராணுவப் பணி!
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் துணை ராணுவப் படையில் 8 ஆயிரத்து 366 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப 8.10.2010 கடைசித் தேதி. விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு: new.ssbrectt.gov.in
ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டதாரிகளுக்கு!
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரிஸ்ஸாவில் இயங்கி வரும் ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சென்றடைய 25.9.2010 கடைசித் தேதி. மேலும் விவரங்களுக்கு, 4-10 செப்டம்பர் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 150 காலியிடங்கள்!
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 150 புரொபேஷனரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை பட்டப் படிப்புடன் சி.ஏ., அல்லது ஏ.சி.எஸ்., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் மூலம் பணி நியமனம் நடைபெறும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப 30.9.2010 கடைசித் தேதி. மேலும் விவரங்களுக்கு: new.bankofmaharashtra.in
NIT கருத்தரங்கில் கலந்துகொள்ள...
திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (nit) 'நேனோ பொருட்களும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாணவர்கள் கருத்தரங்கத்தை அக்டோபர் 23-ம் தேதி நடத்த உள்ளது. இதில் படைப்புகளைச் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர்களை முன்னதாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும். விவரங்களுக்கு: http://new.nitt.edu/home/
jmet தேர்வு அறிவிப்பு!
மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட ஏழு ஐ.ஐ.டி-க்களில் எம்.பி.ஏ., உள்ளிட்ட முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் டிசம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. 'ஜாய்ன்ட் மேனேஜ்மென்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' (jmet) என்று அழைக்கப்படும் இந்தத் தேர்வை இந்த ஆண்டு புதுடெல்லி ஐ.ஐ.டி. நடத்துகிறது. விண்ணப்பங்களை அனுப்ப அக்டோபர் 8-ம் தேதி கடைசித் தேதி. கல்வித் தகுதி, தேர்வு மையம், பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களுக்கு: new.iitd.ac.in
|