முனைவர் சிவக்குமார்
பேராசிரியர், சாந்தோம் பயிலகம், சென்னை.
"பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) மூலம் நடத்தப்படும் தேர்வுதான் NET (National Eligibility Test). அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு CSIR NET (Council for Scientific and Industrial Research) என்றும், கலைப் பிரிவுப் பாடங்களுக்கு U.G.C-NET என்றும் இரண்டு வகைத் தேர்வுகள் நடைபெறும். இத் தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப் பிரிவின் முதுகலைப் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். NET தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றும் தகுதி உங்களுக்குக் கிடைக்கும். மூன்று தாள்கள் இத் தேர்வில் இருக்கின்றன. முதல் தாள், பொது அறிவு சார்ந்ததாகவும், இரண்டாம் தாள், நீங்கள் எடுத்துக்கொண்ட துறை சார்ந்த பாடங்களில் இருந்து கொள்குறி வகையிலும் (objective), மூன்றாம் தாள், அதே துறை சார்ந்த கட்டுரை வடிவில் விடையளிக்கும் வகையிலும் இருக்கும். ழிணிஜி தேர்வுக்கான விண்ணப்பத்திலேயே JRF (Junior Research Fellow) எனப்படும் அட்டவணைப் பிரிவும் இருக்கும். JRF தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், எம்.ஃபில் படிக்காமல் நேரடியாகவே ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளலாம். JRF தேர்வில் தேர்ச்சி பெற்று ஆய்வுப் படிப்புகளை முடித்தால், பிறகு NET தேர்வு எழுதத் தேவை இல்லாமலேயே, விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி அடையும்பட்சத்தில், படிப்புக்காக நிதியுதவியினை U.G.C அளிக்கும். வருடத்தில் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் இத் தேர்வுகள் நடக்கும். இதற்கான அறிவிப்புகள் நாளிதழ்களிலும், U.G.C இணையதளத்திலும் வெளியிடப்படும்!"
சி.மாரிமுத்து, ஸ்ரீவைகுண்டம்.
|