ஸ்பெஷல் -1
Published:Updated:

வாரா வாரா வாலி வாரம்!

வாரா வாரா வாலி வாரம்!


ஹாய் மதன் கேள்வி - பதில்
வாரா வாரா வாலி வாரம்!
வாரா வாரா வாலி வாரம்!
காஷ்மீரை விட்டுக் கொடுத்துவிடலாமா?
வாரா வாரா வாலி வாரம்!

வி.அபிநவ்குமார், மைசூர்-7.

காஷ்மீரில் நடக்கும் கலவரங்களை நம்மால் அடக்க முடியவில்லை. பிரிவினைத் தீயை

அணைக்க முடியவில்லை. முஸ்லிம்கள்தான் அங்கே பெரும்பான்மை. 'போனால் போகட்டும்' என்று காஷ்மீரை விட்டுத்தொலைத்துவிட்டு, நாம் ஏன் நிம்மதியாக வாழக் கூடாது?

கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக 'காஷ்மீர் மக்கள்' என்று நாம் கருதிவிட முடியாது. காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழவே விரும்புகிறார்கள். அந்தச் சூழ்நிலையை மத்திய அரசால் ஏற்படுத்தித் தர முடியவில்லை என்றால், அது யார் தவறு? காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைந்தால் அதன் கதி என்னவாகும் என்பது காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்குத் தெரியும். தனி 'தக்குனூண்டு' நாடாகவும் அது இயங்க முடியாது. பிரிவினை வாதமும், தேச விரோதிகளும், மத வெறியர்களும் இங்கே எந்த மாநிலத்தில்தான் இல்லை? அதற்காகக் கலவரங்கள் நடக்கும் பகுதிகளை எல்லாம் சுதந்திர நாடுகளாக அறிவித்துவிட முடியுமா?! நல்ல கதை!

வாரா வாரா வாலி வாரம்!

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது வாதமே இல்லை. அவர்கள் இந்திய முஸ்லிம்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தவிர, எப்போதில் இருந்து அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஆனார்கள்?!

கொஞ்சூண்டு காஷ்மீர் வரலாற்றை (ஊசி முனை அளவுதான்!) பார்ப்போம். வேத காலத்தில் அங்கு வசித்த காஷ்யப முனிவரின் பெயரில் இருந்துதான் 'காஷ்மீர்' என்று பெயர் வந்தது என்று கருதப்படுகிறது. அவர் மூலம் விருத்தியான மக்களின் பெயர் - (அங்கே மலைகளில் வாழ்ந்த) காசிகள் என்று அழைக்கப்பட்டனர்.

வாரா வாரா வாலி வாரம்!

தமிழ்நாட்டுக்கும் காஷ்மீருக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய, மதரீதியான தொடர்பு இருந்தது. 'சைவ சிந்தாந்த தத்துவத்'தை உருவாக்கிய திருமூலர், காஷ்மீரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர். (சிலர் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் சென்று, பிற்பாடு ஆஃப்கானியர்கள் படையெடுப்பின் காரணமாக மீண்டும் தமிழ்நாட்டில் குடி புகுந்தார் அவர் என்கிறார்கள்). வேதங்களை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு, சாதி, மதங்களைத் தூக்கி எறிந்து 'அன்பு தான் சிவம், உடல் அதற்கான ஆலயம்!' என்கிற தத்துவத்தை உருவாக்கியவர்கள் சைவ சிந்தாந்திகள். இந்தத் தத்துவம் உருவானது காஷ்மீரில்தான். தமிழ் பக்தி மார்க்கத்தை காஷ்மீர் மக்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்து, பிறகு புத்த மத தத்துவ ஞானியாகப் புகழ்பெற்ற நாகர்ஜுனர்... இங்கு இருந்து காஷ்மீருக்குச் சென்று, கடைசி வரை அங்கு வசித்தார். ஆக; பக்தி, தந்திர வழிபாடு (Tantrik), சைவம் மூன்றும் தமிழகத்தில் இருந்து காஷ்மீர் சென்றது!

புகழ்பெற்ற சைவ தந்திரித் தத்துவ மகான் அபிநவகுப்தர் காஷ்மீரைச் சேர்ந்தவரே (970-1025). வரலாற்று மேதை கல்ஹணர் காஷ்மீரில் வசித்து, 'ராஜதாரங்கிணி' காவியத்தை எழுதினார். காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் (ஸ்ரீ!) முதன்முதலில் அசோகச் சக்ரவர்த்தியால் உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டதே. கனிஷ்க சக்ரவர்த்தி காலத்தில் 'உலகப் பெரும் புத்த மாநாடு' காஷ்மீரில்தான் நடந்தது. 1,001 அராபியன் இரவுகள் கதையை எழுதத் தூண்டிய 'கதா சரித் சாகரா' கதைத் தொகுப்பு காஷ்மீரில் உருவானதே (இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, நம்மூர் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது). 'காஷ்மீர் ராமாயணம்'கூட உண்டு - யோக வசிஷ்ட மகாராமாயணம்! (வசிஷ்டருக்கும் ராமருக்கும் இடையே நடைபெறும் நீண்ட உரையாடல் மூலம் ராமாயணம்)! இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டுப் பிரமித்து, உடனே, அதை பாரசீக மொழியில் மொழிபெயர்க்கச் சொல்லி ஆணையிட்டவர் யார் தெரியுமா? மொகலாயப் பேரரசர் அக்பர்!

அக்பருக்குப் பிறகு, நிலைமை மாற ஆரம்பித்தது. வடமேற்கே, இஸ்லாமிய நாடுகள் உருவானதாலும் காஷ்மீர் இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்த தாலும், அங்கே 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகு பெரிய அளவில் விரும்பியும் விரும்பாமலும் மத மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவுக்கு எதிராகத் தேச விரோத சக்திகளை பாகிஸ்தான் தூண்டிவிட்டு, இன்றளவும் காஷ்மீர் என்கிற, இந்தியாவின் அற்புத மான விரல்கள் எரிந்துகொண்டு இருக்கின்றன! சொல்லுங்கள்... காஷ்மீரை விட்டுக்கொடுத்துவிடலாமா?

ஆர்.மோகன்தாஸ், சேலம்-4.

பெண்களை Weaker Sex என்று தற்போது சொல்லப்படுவது இல்லையே, ஏன்?

வாரா வாரா வாலி வாரம்!

நாங்கள் Weaker Sex இல்லை என்று பெண்கள் தொடர்ந்து திட்டவட்டமாக நிரூபித்துக்கொண்டு வருவதால்! எதிர்காலத்தில் ஆண்களை 'வீக்கர் செக்ஸ்' என்று பெண்கள் குறிப்பிடும் நிலைமை வந்தாலும் வரலாம்!

டி.ஜானகிராமன், கொச்சின்.

தமிழில்கூட நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் 'பக்கா' என்பது இந்தி வார்த்தைதானே?

ஒரிஜினலாக சம்ஸ்கிருதம். 'நன்றாக சமைக்கப்பட்டது' (Well cooked) என்று அர்த்தம். அது இந்திக்கு வந்து, ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது இங்கிலீஷ் வார்த்தையாகவும் ஆகிவிட்டது. 'பக்கா ஜென்டில்மேன்' என்றால் முழுமையான, பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் என்று பொருள். (நன்கு சமைக்கப்பட்டவர் என்று இங்கு அர்த்தம் இல்லை!).

வாரா வாரா வாலி வாரம்!
வாரா வாரா வாலி வாரம்!