என்னிடம் இருக்கும் பணம், என் தந்தை எனக்குத் தந்த சொத்து எனப் பலவற்றையும் சேர்த்துவைத்து இருக்கிறேன். இப்படிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டும், சேர்த்துக் கொண்டும் இருக்கிற என்னால், தொழிலதிபர் ஆக இயலவில்லை. என்ன செய்வது?'
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அறிஞர், 'டீ குடிக்கிறீர்களா தம்பி?' என்றார். இளைஞனுக்குக் கொஞ்சம் எரிச்சல்தான். இருந் தாலும், 'சரி' என்றான். டீ கோப்பையை அவன் கையில் கொடுத்த அவர், அதில் டீயை ஊற்ற ஆரம்பித்தார். டீ கோப்பை நிரம்பியது, இருந் தாலும் அறிஞர் டீ ஊற்றுவதை நிறுத்தவில்லை. கோப்பை நிரம்பி வழிந்ததும், இளைஞன் இன்னமும் எரிச்சலானான். 'என்ன அறிஞரே இப்படிச் செய்துவிட்டீர்கள்?' என்று கோபமாகக் கேட்டான். அறிஞர் அமைதியாகச் சொன்னார், 'தம்பி, உங்கள் மனசும் இப்படித்தான்இருக் கிறது. டீ கோப்பை நிரம்பி இருக்கும்போது மேலும் மேலும் டீயை ஊற்றினால், அது எப்படி பயனின்றி வெளியே கொட்டுமோ, அதேபோல் நீங்கள் சேர்க்கிற, தெரிந்துகொள்கிற எல்லா விஷயங்களும் வீணாக வெளியே வழிந்துவிடுகின்றன' என்றார் அறிஞர்.
இளைஞனுக்குப் புரியவில்லை. அறிஞர் தொடர்ந்தார். 'தம்பி தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற முனைப்பில் நீங்கள் அறிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள். அதற் குத் தேவைப்படும் விஷயங்களைச் சேர்க்கிறீர்கள். ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ள உங்கள் மனதில் இடம் இல்லை. அதனால், அவை வீணாக வெளியேறுகின்றன. உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் நீங்கள், எதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறீர்களோ, அதைவிட முக்கியமானது தேவை இல்லாத விஷயங்களை அழிப்பதுதான். அப்போதுதான், நீங்கள் சேர்க்கும் விஷயங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கும்!' என்றார் அறிஞர்.
இந்த அறிஞர் சொன்னது வாழ்வியல் நிர்வாகம் குறித்த ஒரு தத்துவம். நமது குறைகளைக் களையாமல், புதிய நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது. சேர்த்தல் எவ்வளவு முக்கியமோ, நீக்கலும் மிக முக்கியம். இளைஞர் இப்போது தன்னைப்பற்றி சுய ஆய்வு மேற்கொண்டார். ஒரு தொழிலதிபர் ஆக முயலும் என்னிடம் இருக்கும் குறைகள் என்னென்ன என்று பட்டியல் இட்டார். ஆர்வம் இருக்கும் அளவு பொறுமை இல்லை. வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. நிறைய சோம்பேறித்தனம் இருக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடும் குணம் இருக்கிறது.
|