சினிமா
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

வழிகாட்டுங்கள், ஒளி தாருங்கள்!

எங்கள் அருமைத் தந்தையே, அன்புத் தலைவரே!

தலையங்கம்

தங்கள் பிரிவால் நாங்கள் அநாதைகளாகத் தவித்து நின்றபோது, தாங்கள் நடந்து காட்டிய ஒளி மிக்க பாதையும், தாங்கள் எங்களுக்கு உணர்த்திய நெறிகளும், எங்களுக்குப் பெரும் ஆதரவாகவும் உற்ற துணையாகவும் நின்றன. அந்த வழியிலும் ஒளியிலும் இந்த ஓராண்டு காலம் நடந்து வந்து, எங்களால் இயன்ற பணிகளைச் செய்து வந்திருக்கிறோம்.

தமிழ் கூறும் நல்லுலகத்து அன்பர்களுக்கெல்லாம் விகடன் அன்புத் தோழனாக விளங்க வேண்டும் என்று விரும்பி, அந்த லட்சியத்திற்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டீர்கள். வாசக அன்பர்களுக்கெல்லாம் பயனுள்ள விஷயங்களையும், மகிழ்ச்சியூட்டும் விஷயங்களையும் வாரி வாரி வழங்கவேண்டும் என்று வழிகாட்டினீர்கள்.

உயிருக்கும் மேலாக தாங்கள் நேசித்த தமிழகத்தின் சிறப்புக்களையெல்லம் தமிழன்பர்கள் அனைவரும் அறியச் செய்யவேண்டும் என்ற தங்களது விருப்பத்தின்படி, தங்கள் நல்லாசியின் துணை கொண்டு, மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டு, மக்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்று வருகிறோம்.

நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளிலும் நாட்டின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் பக்கம் உறுதியுடன் நின்று, நடுநிலை தவறாத நேர்மையுடன் கருத்துக்களைத் தெரிவித்து வந்திருக்கிறோம். மக்களுக்குத் தேவையான பயனுள்ள செய்திகளையும், மக்களை உற்சாகப்படுத்தும் சுவையான விஷயங்களையும் காலத்திற்கேற்ற முறையிலும், தாங்கள் கட்டிக் காத்த தரத்தினின்று வழுவாமலும் அளித்து வந்திருக்கிறோம்.

தாங்கள் எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கும் பணியோ மிகப் பெரியது; நாங்களோ மிகச் சிறியவர்கள். இருப்பினும், தங்கள் தலைமை தந்த மன உறுதியுடன், தாங்கள் வாழ்ந்த லட்சி யங்களுக்காக எங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விகடன் இதழையும் தங்கள் பொன்னான நினைவுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வருகிறோம்.

தங்கள் பாதாரவிந்தங்களைக் கண்ணீருடன் நினைந்து, அடி தொழுகிறோம்.

எங்கள் பணி மேலும் சிறக்க வழி காட்டுங்கள்; ஒளி தாருங்கள்.

தலையங்கம்
தலையங்கம்