சினிமா
Published:Updated:

ரஷ்யாவில் திடீர் நாடகம்!

ரஷ்யாவில் திடீர் நாடகம்!


விகடன் பொக்கிஷம்
ரஷ்யாவில் திடீர் நாடகம்!
ரஷ்யாவில் திடீர் நாடகம்!
ரஷ்யாவில் திடீர் நாடகம்!
ரஷ்யாவில் திடீர் நாடகம்!

டப்பிடிப்பின்போதும், நாடகங்களிலும் ஏற்படக்கூடிய திடீர்ப் பிரச்னைகளை சமயோ

சிதமாகச் சமாளிக்கக்கூடியவர் கலைவாணர்.

அவர் ரஷ்யாவிற்குச் சென்று இருந்தபோது, இந்தியக் கலைக் குழுவினர் ரஷ்யர்களுக்கு இந்தி யக் கலாசாரங்களை சிறு நிகழ்ச்சி கள் மூலம் காட்டும் சந்தர்ப்பம் வந்தது. கலைக் குழுவில் இந்தி மற்றும் வங்காளிக் கலைஞர்கள் அதிகமாக இருந்ததால், சிறு சிறு நிகழ்ச்சிகளைத் தங்களுக்குள் அவர்கள் அமைத்துக்கொண்ட னர். தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்.எஸ்.கே., மதுரம், டைரக்டர் கே.சுப்ரமணி யம் ஆகிய மூவர்தான். கடைசி நேரத்தில், கலைவாணரும் ஒரு தமிழ் நிகழ்ச்சியைத் தருவதாகத் துணிந்து ஒப்புக்கொண்டார்.

மற்றவர்களுடைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த நேரத்தில், தங்கள் மூவருக்குள் ஒரு நிகழ்ச்சியை அமைத்துவிட்டார் என்.எஸ்.கே. அதுவே கடைசி நிகழ்ச்சி. ஆனால், முதல் பரிசையும் பாராட்டையும் பெற்ற நிகழ்ச்சி அதுதான்.

ரஷ்யாவில் திடீர் நாடகம்!

ஒரு கடன்காரன் திடீரென்று வந்துவிடுகிறான். அவனை விரட்டுவதற்காக கணவன் மனைவியை அடிப்பதும், மனைவி கடன்காரன் காதில் விழும்படி 'குய்யோ முறையோ' என்று அழுது அலறுவதுமாக காட்சி ஆரம்பமாகிறது. கடன்காரன் தலை மறைந்ததும், அவன் ஏமாந்துபோய்விட்டான் என்று இருவரும் மெச்சிப் பேசிக் கொள்கின்றனர். அந்த நேரத்தில், கதவின் பின்னால் மறைந்திருந்த அந்தக் கடன்காரன், 'எப்படி நான் போகாமல் வந்தேன்' என்று சொல்லி, முன்னால் வந்து நிற்கி றான். நமது கிராமத்துப் பழங் கதையைத் தத்ரூபமாக மூவரும் நடித்துக் காட்டினர்.

எத்தனையோ நடிகர்களைத் தயாரித்த டைரக்டர் சுப்ரமணியம், அன்று கலைவாணர் டைரக்ஷனில் நடிகராக நடிக்க நேர்ந்தது. அனைவரும் கலைவாணரின் திறனை மிகவும் பாராட்டினர்.

வாகினி ஸ்டூடியோவில் 'டாக்டர் சாவித்திரி' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கலைவா ணர், போட்டோ ஸ்டூடியோ உரிமையாளராக நடித்தார்.

திடீரென்று படத் தயாரிப்பு நிர்வாகியை அழைத்து, ரசிகமணி டி.கே.சி., கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பேராசிரியர் கல்கி மூவரின் பெரிய சைஸ் புகைப்படங் களை உடனே கொண்டு வருமாறு சொன்னார் கலைவாணர். படங் களை வைத்து என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

படங்கள் மாட்டப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியது. கலைவாண ருடன் ஸ்டூடியோ பாயாக நடித் தவர் அந்தப் படங்களைச் சுட்டிக் காட்டி, "இவர்கள் யார்?" என்று கேட்க, "தெரியாதா உனக்கு? இதோ, வெள்ளை மீசை யுடன் கவர்ச்சியாக இருக்கிறாரே இவர்தான் ரசிகமணி டி.கே.சிதம் பரனாத முதலியார். உத்தரியத்தை மூடிக்கொண்டு சாதுவாக இருக் கிறாரே, அந்தப் பெரியவர்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. நேர் வகிடு எடுத்துக் கொண்டு, கண்ணாடியுடன் கண் ணியமாக இருக்காரே, இவர்தான் 'எழுத்துமணி' பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி" என்று விளக்கிச் சொல்லி, அந்தப் பெரியவர்களைப் பெருமைப்படுத்தும்விதமாக ஒரு காட்சியை அமைத்துவிட்டார் கலைவாணர்.

- ரேவதி

ரஷ்யாவில் திடீர் நாடகம்!
ரஷ்யாவில் திடீர் நாடகம்!