சென்னையில், மீனம்பாக்கத் துக்கும் பல்லாவரத்துக்கும் இடையே 'திரிசூலம்' ரயில்வே ஸ்டேஷன் உருவானது.
ஒரு புதிய ஸ்டேஷன் உருவாகிறது!
சென்னை பீச்-தாம்பரம் மின்சார ரயில் பாதையில், மீனம் பாக்கத்துக்கும் பல்லாவரத்துக்கும் இடையேதான் தொலைவு அதிகம். இந்த இரு ஸ்டேஷன்களுக்கு மத்தி யில்தான் 'மெயின் லைன்' ரயில்களுக்கும், மின்சார ரயில்களுக்கும் 'ரேஸ்' நடக்கும்! இனி இதற்கெல்லாம் சான்ஸ் இல்லை.
தற்போது புதிய விமான நிலையம், இவ்விரு ரயில் நிலையங்களுக்கும் இடையில்தான் அமைந்திருக்கிறது. எனவே, விமானப் பயணிகளின் நலன் கருதி, ஏர்போர்ட்டுக்கு எதிரில் ஒரு புதிய ரயில் நிலையம் படுவேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டம்!
பத்து வருடங்களாக, திரிசூலம் கிராமத்து மக்கள் என்ன முயன்றும் கொண்டு வர முடியாத ஒரு ரயில்வே ஸ்டேஷனை, புது விமான நிலையம், வந்த சில மாதங்களிலேயே கொண்டு வந்துவிட்டது.
'புது ஸ்டேஷனுக்கு என்ன பெயர் வைப்பது?' என்று ஏகக் குழப்பங்கள் ஏற்பட்டதாகக் கேள்வி. 'ஏர்போர்ட் ஸ்டேஷன்' என்று முதலில் பெயர் வைப் பதாக இருந்தது. ஆனால் நேஷனல், இன்டர்நேஷனல் என இரண்டு விமான நிலையங்கள் இருப்பதால், இது தவிர்க்கப் பட்டிருக்கிறது.
"இந்த ஸ்டேஷனுக்கு 'திரிசூலம்' என்ற பெயர் வருவதற்கு என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்" என்று உள்ளூர் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்ததாக ஊர் மக்கள் கூறி னார்கள். 'திரிசூலம் ஸ்டேஷன்' என்ற பெயரில்தான் ரயில்நிலைய வேலைகளெல்லாம் இயங்கிக்கொண்டும், வழங்கப்பட்டும் வருகின்றன.
"எந்த ஸ்டேஷன்லேயும் இல்லாத வகையில் இங்கே மாடிப்படிக்குப் பதிலா சுரங்கப் பாதை கட்டறோம். இந்த சுரங்கப் பாதையை நேரா விமான நிலையத்தின் நுழைவாயிலுடன் இணைக்கலாமானுகூட ஒரு ஐடியா இருக்கு!" என்றார் ஸ்தலத்தில் இருந்த அதிகாரி முத்துகிருஷ்ணன்.
- எஸ்.சுபா
|