ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கு
இலவசப் பயிற்சி
2011-ம் ஆண்டு மத்திய தேர்வாணைக் குழு (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு, தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் இலவசப் பயிற்சி அளித்து வருகிறது. இந்தப் பயிற்சியை அண்ணா மேலாண்மை நிலையத்தின் ஒரு பிரிவான அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் நடத்தி வருகிறது. வரும் டிசம்பர் முதல் ஆறு மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வு மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வு 31.10.10 அன்று நடைபெறும். விண்ணப்பங்களை 15.09.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு விவரங்கள், பயிற்சி முறை உள்ளிட்ட விவரங்களுக்கு new.civilservice-coaching.com
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிப் பணி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள முதுநிலை மேலாளர், மேலாளர், மேலாண்மை நிர்வாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட 883 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 8.9.10. கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு new.pnbindia.com
யுனைடெட் வங்கியில் கிளார்க் பணி
யுனைடெட் வங்கி 700 கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 60 சதவிகித மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன், மூன்று மாத கணினிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு 28.11.10 அன்று நடைபெறும். பிற தகவல்களுக்கு new.unitedbankofindia.com
|