சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

அறிதல்

தட்டானை
ஹெலிகாப்டர் பூச்சியென

சொல்வனம்

முதலில் அறிந்தேன்

தட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு

போறான் பாரு
வாலில் நூல் கட்டிய பொறம்போக்கு
என அறிந்திருக்கலாம்
தட்டானும் என்னை

பொறம்போக்கே ஆனாலும்
பூச்சியே ஆனாலும்
பரஸ்பரம் அறியப்படுதலில்
ஒரு மகிழ்ச்சியே பூச்சி!

- பா.ராஜாராம்

படம் காட்டிக் கதை சொல்லல்...

சொல்வனம்

புகைப்படங்களால் நிறைந்திருந்தது
எங்கள் கிராமத்து வீடு
அப்பாவின் நிழலாய்
அம்மா பின் நின்றிருக்கும்
புகைப்படம் தொடங்கி
கமல்ஹாசனுடன் அண்ணன்
எங்கோ படப்பிடிப்பில்
எடுத்துக்கொண்ட புகைப்படம் வரையில்
வரும் விருந்தினருக்கு எல்லாம்
படம் காட்டிக் கதை சொல்லல்
அப்பாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு
இப்போதோ...
பட்டணத்து புது ஃப்ளாட்டில்
படங்கள் கூடாதெனச் சொல்லிய மனைவி
'ஹோ'வென விழும் வால் பேப்பர் நயாகராவை
ஹாலில் அமைத்திட
வெறுமனே வெறித்துக்கொண்டிருக்கிறார்
அப்பா
அதுபற்றிக் கதை சொல்ல
தன்னிடம் நிகழ்வேதும் இல்லாமல்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்

விளையாட்டு மைதானக் கொலுசு

சொல்வனம்

எல்லோரும் கடந்து போகிற
பள்ளி மைதானக் குறுக்கு வழியைக்
கடக்கிறபோது
கேட்பாரற்றுக்கிடந்த
ஒற்றைக் கொலுசை
என்ன செய்வதென்று யோசித்து
தன் கைப்பையில் திணித்துக்கொண்டான்.

ஒற்றைக் கொலுசோடு
தன் அம்மாவிடம் அடி வாங்கும் சிறுமியும்
தொலையும் தன் காதலின்
அபசகுனம் எனப் புலம்பும் விடலைப்பெண்ணும்
பிரியம் முற்றிய நாளன்றில்
தன் கால்களைத் தொட்டுணர்ந்த
இப்போதில்லாத கணவனை
நினைத்தேங்கும் பெண்ணும்
சிலம்பைப்போல விற்பனைக்கு எடுத்துச் சென்ற
குடிகாரனை மணந்த பெண்ணின்
கடைசி நிராசையுமாக
இம்சிக்கத் துவங்கின
அன்றிரவு கனவில்!

- க.அம்சப்ரியா

பார்வை

சொல்வனம்

எதிர் இருக்கைப் பயணி
சேகுவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிவிடக்
கேட்டுக்கொண்டான்

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக்கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என் மீதும் - அவன்
சூட்கேஸ் மீதும்!

- பாப்பு

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்