ரா.அன்பழகன், கோவை-4.
சாதாரணமாக, எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்புகூட எனக்குக் கிடைப்பது இல்லை. நான் துரதிருஷ்டசாலிதானே?
வாய்ப்பு என்கிற ஒரு கதவு மூடிக்கொள்ளும்போது, வேறு பல கதவுகள் திறக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த பழைய பொன்மொழிதான்! பலர் என்ன செய்கிறார்கள் என்றால், மூடிய கதவுக்கு அருகே, அதையே பார்த்துக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்தானே மற்ற கதவுகள் திறப்பது தெரியும்!
சுகந்தாவாசன், பெங்களூரு-20.
இந்தியர்களைப்போல 'நேரம் தவறாமை'பற்றி கவலையே படாத மக்கள் வேறு எந்த நாடுகளில் உண்டு?
எத்தனை நாடுகள் அப்படி என்று தெரியாது! ஏன்? தமிழ்நாட்டிலேயே, மறைந்த தொழில் - விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு மணி 11.23' என்று அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவிட்டு, கரெக்டாக அங்கே இருப் பவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். பிரான்ஸ் நாட்டில் எல்லோரும் 'லேட்'டாக வருவதால் பிரச்னை இல்லை. நான் மூன்று முறை கரெக்டாகப் போனால், இரண்டு தரம் லேட்டாகப் போகிறேன். மனசு கூசு கிறது. 'லேட்'டாகப் போவது ஆபத்தானது.
பிப்ரவரி 15, 1876-ல் அமெரிக்காவில் எலிஷா க்ரே என்பவர், ஒரு கருவியைக் கண்டுபிடித்துவிட்டு Patent office-ல் பதிவு செய்ய சாவ தானமாகச் சென்றார். 'அடடா! இரண்டு மணி நேரத்துக்கு முன்னால்தான் மிஸ்டர் கிரஹாம் பெல் என்பவர் இதே கண்டுபிடிப்புடன் வந்து பதிவு செய்துவிட்டாரே!' என்றார்கள். டெலிபோன்!
லீலா இராம், தக்கலை.
புகழ், செல்வம் - மனிதனுக்கு கட்டுக்குள் அடங்காத தாகம் எதில் அதிகம்?
செல்வம் கட்டுக்குள் அடங்கும். புகழ் அடங்காது. ஒரு கோடீஸ்வரர் என்னிடம் கேட்டார்... 'ஏதாவது சினிமாவில் ஒரே ஒரு ஸீனில் நான் வரும்படி செய்ய முடியுமா?!
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
உங்கள் பிறவிப்பயனாக எதைக் கருதுகிறீர்கள்?
நான் கருதுவது ஒன்றுதான். பிறவி, பயனாக அமைய வேண்டும்!
|