மூன்றாம் நிலை: குழந்தை மேலும் அதிகமாக வளர்ந்து அதன் மூளை இன்னும் கொஞ்சம் முதிரும்போது, அதற்கு 'நான் என்பது வேறு. என் அம்மா என்பது வேறு' என்பது புரிந்துபோகும். தன்னை ஒரு தனி உயிரி யாகக் கருதி, தனக்கெனத் தனி அபிப்ராயம், தனி நம்பிக்கைகள், பிரத்தியேகமான ஒரு வாழ்க்கை என் றெல்லாம் குழந்தை யோசிக்க ஆரம்பிக்கும். அதனால், அது தாய்- தந்தையோடு முரண்படும். இப்படி தாயி டம் இருந்து பிரிந்து, தனக்கு என்று ஒரு தனி சுய அடையாளத்தைக் குழந்தை ஏற்படுத்திக்கொள்வதைத் தான் Separation-Individuation என்பார் மேலர். இப் படிப் பிரிந்து, தனித்துவமாவதுதான் எல்லா ஜீவராசிக் குட்டிகளுக்கும் இயல்பு. இந்த நிலையை அடைந்தால்தான், குட்டி எங்கு சென்றாலும், பிழைத்துக்கொள்ளும் பக்குவத்தைப் பெறும்.
மார்கரெட் மேலர் சொன்ன இந்தச் சங்கதி எல்லா உயிர்களுக்கும் பொது. பருவ வயதை அடையும்போதே எல்லாக் குட்டிகளும், 'எனக்கு என்று ஒரு தனிப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து, என் தனி ராஜ்யத்தை அமைத்துக்கொண்டு, இனி என் மரபணுக்களைப் பரப்பும் வேலையைப் பார்க்கிறேன்' என் கிற அணுகுமுறைக்கு மாறிவிடுகின்றன. இதே காலத்தில், எதிர் பாலின ஈர்ப்பும் மிக அதிகமாகி விடுவதால், துணை தேடி, இனம் சேரும் உந்துதலும் தலை தூக்கிவிடுகின்றன.
இதெல்லாம் இயற்கையின் அமைப்பு. காலங் காலமாக மனிதர்களும் இதற்கு உடன்பட்டார்கள். அவ்வளவு ஏன், இன்றும்கூட பெண்கள் அதிக சுதந்திரமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. ஆனால், எங்கெல்லாம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, இன்செக்யூராக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தம் பிழைப்பை அதிகரித்துக்கொள்ள, பெண்கள் இந்த விதியை அப் படியே மாற்றிவிடுகிறார்கள். தனக்கு அதிக பாது காப்பு தரும் குழந்தையை, எந்த வயதிலும்பிரிய விடாமல் தன்னுடனேயே தக்கவைத்துக்கொள்கிறார்கள்.
அம்மா இப்படிச் செய்தால், அவள் குழந்தைக்கு எங்கே போச்சாம் அறிவு?
ஆடு, மாடு, புலி, சிங்கம், அவ்வளவு ஏன், எலி, அணில் மாதிரியான ஐந்தறிவு ஜீவன்கள்கூடச் சரி யான பருவத்தில் தனித்துவமாகி, சுயமாக இயங்கும் போது, ஆறறிவு இருப்பதாக அலட்டிக்கொள்ளும் மனிதர்கள், இப்படி இன்னும் 'அம்மாவும் நானும் ஒண்ணு' என்று முதிராத நிலையிலேயே நிற்கும் மாயம் என்ன?
|