ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

இது விளையாட்டல்ல!

தலையங்கம்

முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் ஓரிடத்தில் கூட்டி, பல்வேறு பந்தயங்களையும் போட்டிகளையும் நடத்தி வெற்றி காண்பது என்ன, சாதாரண விளையாட்டா?

ஆசிய நாடுகளுக்கிடையே எத்தனையோ வேறுபாடுகளும், பகை உணர்ச்சியும், அரசியல் போட்டிகளும், பொருளாதாரப் பிணக்குகளும் இருந்தாலும், அவற்றையெல்லாம் பதினைந்து நாட் களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, தாங்களும் மகிழ்ந்து, பார்வையாளர்களையும் மகிழச் செய்வது மகத்தானதொரு நிகழ்ச்சியல்லவா?

ஆசிய நாடுகளுக்காக ஒரு விளையாட்டுப் பந்தய விழா நடத்தவேண்டுமென்று 'ஆசிய ஜோதி' நேருஜியின் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன் பலனாகத்தான் 1951-ம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவில் 'ஆசிய விளையாட்டு' தொடங்கியது. 31 ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டா வது முறையாகத் தற்போது மீண்டும் இங்கு நடைபெறுகிறது. இது 9-வது ஆசிய விளையாட்டு.

எத்தனையோ கோடி ரூபாய் செலவாகியிருக்கலாம்; எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கலாம்; யார் யாரோ கொள்ளையடித்திருக்கலாம்; அரசியல் புகுந்து அனர்த்தங்கள் விளைந்திருக்கலாம். 'மக்கள் வறுமையில் வாடும்போது, ஏழை இந்தியாவில் இத்தனை செலவில், இப்படியரு தமாஷ் தேவைதானா?' என்ற கேள்வியில் ஓரளவு நியாயமும் இருக்கலாம். ஆனால், இந்த விழாவின் மகத்தான சாதனையைக் கண்டு, ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் பெருமையடையலாம்.

உலக ஒலிம்பிக் கமிட்டித் தலைவர், தொடக்கவிழா நிகழ்ச்சிகளையும், நிர்வாகிகள் செய்துள்ள இதர ஏற்பாடுகளையும் பார்த்துவிட்டுப் பிரமித்துப்போய், 1992-ம் ஒலிம்பிக் விளையாட்டைக்கூட நடத்த இந்தியா தற்போது தகுதி பெற்றுவிட்டது என்று பாராட்டியிருக்கிறார்.

பயனுள்ள, பிரமாண்டமான இந்த விழாவின் பின்னணியில் இழையோடும் நல்லுறவையும், நல்லெண்ணத்தையும் நினைக்கும்போது, குற்றம் குறைகள் பெரிதாகத் தோன்றவில்லை. அரசிய லுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையுணர்வும், ஒருங்கிணைந்த இதய உணர்ச்சியும்தான் பளிச்சிடுகின்றன.

தலையங்கம்
தலையங்கம்