இத்தகையதோர் அரிய சந்தர்ப்பத்தைத் தம் வாழ்க்கையில் பெற்ற ஸ்ரீமதி சுந்த ராம்பாளின் ஜீவிய சரிதம் மிகவும் ருசிகரமானதாகும். இவர் திருச்சி ஜில்லாவைச் சேர்ந்த கரூரில் பிறந்தவர். ஆனால், இவர் வளர்ந்தது கொடுமுடியில்! சிறு பெண் ணாயிருக்கும்போதே, இவர் நன்றாகப் பாடுவா ராம். யாராவது பாடினால், அதை சூக்ஷ்மமாகக் கவனித்து, அதுபோலவே தாமும் திரும்பப் பாடுவாராம்.
தக்க வயது வந்ததும் இவர் நாடக மேடையில் தோன்றினார். இவருடைய புகழ் நாளடைவில் பெருகி வந்தது. காலஞ்சென்ற ஸ்ரீமான் எஸ்.ஜி.கிட்டப்பா, கன்னையா கம்பெனியிலிருந்து பிரிந்து இவரோடு சேர்ந்து தனி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர், ஸ்ரீமதி சுந்தராம்பாளின் பெயர் பிரசித்தமாயிற்று. ஸ்ரீமான் கிட் டப்பாவும், ஸ்ரீமதி சுந்தராம்பாளும் நாளுக்கு நாள் நல்ல பெயர் பெற்று வந்தனர். வெண்ணெய் திரண்டு வரும் சமயம் தாழி உடைந்ததென்பதைப்போல், அவர்களுடைய புகழ் உச்ச நிலைமையில் இருந்த சமயத்தில், ஸ்ரீமான் கிட்டப்பா காலமானார். ஸ்ரீமான் கிட்டப்பாவை மணம் புரிந்த பதியாகவே கருதி ஒழுகி வந்த ஸ்ரீமதி சுந்தராம்பாள் சோகக் கடலில் ஆழ்ந்தார். அவரது அஸ்தியைக் கங்கையில் கரைத்துவிட்டு வந்து ஏழைகளுக்கு அன்னமளித்தார்.
|