"ஆங்கில அறிவுக்கு நிகராக இன்று கணிப்பொறி, இணைய பரிச்சியமும் அவசியம், அத்தியாவசியம். இன்டர்நெட் என்றவுடனே ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், யூ டியூப் டவுன்லோடுகள் மட்டும்தான் என்று நினைத்தால், வெரி ஸாரி. ஒரு இடத்தில் வேலைக்குச் சேரும்போது உங்க இணைய அறிவைச் சோதிக்க இ-மெயிலில் ஒரு ஃபைலை அட்டாச் செய்து அனுப்பச் சொல்லலாம். அல்லது தமிழில் ஒரு பத்தியை டைப் அடிக்கச் சொல்லலாம். அந்தச் சமயத்தில், உங்கள் இ-மெயில் இணைப்புகள்பற்றி தெரியாமல் இருந்தாலோ அல்லது தமிழ் யூனிகோட் எழுத்துரு பற்றிய அறிமுகம் இல்லாவிட்டாலோ... டிகிரி படிப்பை ஃபர்ஸ்ட் கிளாஸில் முடித்திருந்தாலும், உங்களைப் படிப்பற்றவர் போலத்தான் நடத்துவார்கள். சமூக வலைதள நிகழ்வுகள்பற்றிய 'அப்டேட்' அறிவும் அவசியம். அதற்காக அதிலேயே பழியாகக் கிடந்து, மூழ்கித் திளைத்து, நேரத்தை விரயமாக்கவும் கூடாது. சமயங்களில், உங்கள் சமூக வலைதள சேட்டைகள், உங்கள் இமேஜ் அல்லது வேலைக்கு உலை வைப்பதாகக்கூட அமையும். இது தவிர எக்ஸல், பவர் பாயின்ட் போன்ற சில அடிப்படைப் பயன்பாடுகளும் தெரிந்து இருக்க வேண்டும். இணைய அறிமுகம் இருந்தாலும், கணிப்பொறி கீ-போர்டு பயன்படுத்தத் தெரியவில்லை என்றால், 10 நிமிட வேலை 10 மணி நேரம் வரைகூட இழுத்தடிக்கும். நேர்முகத் தேர்வில் கணிப்பொறி முன் அமர்ந்திருக்கும் உங்களிடம், ஒரு செல்போன் நம்பரை டைப் செய்யச் சொல்லும்போது, அதை டைப் செய்ய கீ-போர்டில் ஆங்கில எழுத்துக்களுக்கு மேலே உள்ள விசைகளைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது வலதுபுறம் இருக்கும் விசைகளையா என்பதைக்கூட எதிர்பார்ப்பார்கள். மவுஸையே அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துவதைவிட 'கீ-போர்டு ஷார்ட் கட் கீ'க்களைப் பயன்படுத்துகிறீர்களா என்பதையும் கவனிப்பார்கள்.
இனிப்பாகவே இருந்தாலும், அதை கலர் பேப்பரில் சுற்றித்தானே சாக்லேட்டாகக் கொடுக்கிறார்கள். அதே ஃபார்முலாதான். நீங்கள் அறிவாளியாக, திறமைசாலியாக இருக்கலாம். அதைத் தக்க தருணத்தில் அழகாக வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும். ஆல் தி பெஸ்ட்!" என்று வாழ்த்துடன் முடிக்கிறார் சுரேஷ்குமார்.
கல்லூரி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சிகள் நடத்திவரும் 'மைன்ட் டைனமிக்ஸ்' மையத்தின் தலைவர் முத்தையா ராமநாதன் ஆரோக்கியமான உடலைக் கைக்கொள்ள சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்.
நீச்சல்
"உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் கலை நீச்சல்தான். உற்சாகமான மனநிலை, தொந்தி இல்லாத மெலிந்த உடல்வாகு, முதுகு - மூட்டு வலிகள் இல்லாமல் இருப்பது போன்றவை நீச்சலின் பயன்கள். ஆபத்து சமயங்களில் நீருக்குள் தத்தளிப்பவர்களை இழுத்து கரையில் போடும் அளவுக்கு நீச்சலில் ஆழமான பயிற்சிகள் பெறுவது நலம்!"
தற்காப்புக் கலைகள்
"கராத்தே, ஜூடோ போன்று ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வது உடலையும் மனதையும் நெறிப்படுத்தும். கராத்தே தெரியும் என்பதற்காக வம்புச் சண்டைகளுக்குப் போவது எல்லாம் கற்ற கலைக்குத் துரோகம் செய்வது போன்றது. ஆபத்தான, அதிலும் மிகவும் தேவையான சமயத்தில் மட்டுமே கற்றுக்கொண்ட கலையைப் பிரயோகிக்க வேண்டும்!"
அடிப்படை மெக்கானிசம்
|