"என் வயது 26. இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டதும் ஒரு வருடத்துக்கு முன் நானும் என் கணவரும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டோம். ஆனால், இப்போது இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. அதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா? என் கணவருக்கு வயது 34. அவர் மத்திய அரசு ஊழியராக உள்ளார். அவரது சர்வீஸ் ரெக்கார்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டது பதிவாகிவிட்டது. ஒருவேளை நாங்கள் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தால், சர்வீஸ் ரெக்கார்டுகளில் அதைப் பதிவுசெய்வது அவசியமா?"
புருஷோத்தமன் விஜயகுமார்,
இயக்குநர், குடும்ப நலத் துறை.
"இருவரையும் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய பிறகுதான் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள் வதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும். அப்படி நீங்கள் தகுதி யுடன் இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் நீங்கள் மீண்டும் குழந்தைப் பேறு அடையலாம். ஆனால், அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள கணவன், மனைவி இருவரின் ஒப்புதலும் அவசியம். இத்தனைக்குப் பிறகும் மீண்டும் குழந்தை பிறப்ப தற்கான சக்சஸ் ரேட் என்பது 50:50தான். எல்லாம் நல்லபடியாக நடந்து, நீங்கள் இன்னொரு குழந்தை பெற்றுக்கொண்டால், நிச்சயம் அதற்கு உரிய சான்றிதழை உங்கள் கணவர் பணிபுரியும் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இரண்டு குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு ஊதிய உயர்வுச் சலுகைகள் வழங்கப்படும். ஆனால், நீங்கள் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால், அந்தச் சலுகைகள் ரத்து செய்யப்படும். அதே சமயம், மூன்றாவது குழந்தைபற்றி உங்கள் கணவர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்காமல் இருந்தாலும், பின்னாளில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். தெளிவாகத் திட்டமிடுங்கள்!"
வி.குமரகுருபரன், திருநெல்வேலி.
"என் நண்பன் போலியோ பாதிப்பால் இடது கால் ஊனமுற்றவன். ஊனத்தின் அளவு 50 சதவிகிதம். ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர மோட்டார் வண்டிகளை தமிழக அரசு இலவசமாக வழங்குவதாக அறிந்தேன். அது அவனுக்குக் கிடைக்குமா? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?"
ஜோசப் சேவியர்,
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், சென்னை.
"இரண்டு கால்களும் செயல் இழந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே மூன்று சக்கர மோட்டார் வாகனம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் பாதிப்பின் சதவிகிதம் 80 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும். +2 மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கும், சுய தொழில் அல்லது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த வாகனம் வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தில், தேசிய அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். தகுந்த பரிசீலனைக்குப் பிறகு தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட நாள் முதல், சீனியாரிட்டி அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்படும். மாற்றுத் திறனா ளிகள் சுயதொழில் தொடங்க விரும்பினால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்தர சிபாரிசு செய்யப்படும்!"
|