ஸ்பெஷல் -1
Published:Updated:

நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்

நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்


ஹாய் மதன் கேள்வி பதில்
நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்
நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்
நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன?
நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்

கே.ஆர்.உதயகுமார், சென்னை-1.

அந்தக் கால சினிமா வில்லன் நடிகர்கள் எல்லாம் இரண்டு எழுத்து இனிஷியலுடன் (எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், எஸ்.ஏ.அசோகன்) இருந்தார்கள். அதன் பிறகு வந்த வில்லன்கள் (சத்யராஜ், ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், ஆனந்த்ராஜ்) யாரும் இனிஷியலுடன் இல்லையே, ஏன்?

நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்

அப்போது அது ஃபேஷனாக இருந்தது. தவிர, சினிமாவில் நடித்தவர்களைக் 'கூத்தாடி'

என்று குறுகிய மனப்பான்மையோடு பார்த்த காலம் அது. வில்லன் நடிகர்கள் என்றால், கேட்கவே வேண்டாம். 'எங்களுக்கும் குடும்பம் உண்டு. கௌரவமான பரம் பரை உண்டு...' என்பதைச் சூடாகத் தெரிவிக்க சிலர் இனிஷியலைச் சேர்த்துக்கொள்ள, பிறகு எல்லோருமே அதைப் பின்பற்றி இருக்க லாம். இப்போது பொதுவாகவே சினிமா நடிகர்கள் (முதல்வராக ஆகும் அளவுக்கு) மதிக்கப்படுகிறார்கள். ஆகவே, இனிஷியல் தேவை இல்லை!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கேள்வி கேட்க யாருமே இல்லாதுபோனால் என்ன செய்வீர்கள்?

கையில் நோட்புக், பேனாவுடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊருக்கும் பயணம் செய்து, தெருவில் எதிரில் வருகிறவர்களிடம் எல்லாம் 'எனி கொஸ்டீன்ஸ் ப்ளீஸ்?' என்று கேட்க வேண்டியதுதான். நீங்க வேற! மக்கள், (அரசியல் தலைவர்களைத் தவிர) மற்ற எல்லோரிடமும் கேள்விகள் கேட்பதில் கில்லாடிகள் என்பதால், அப்படி ஒரு நிலைமை வரவே வராது!

மல்லிகை மன்னன், மதுரை-17.

தன் மகன் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆக வேண்டும் என்று தான் ஒரு தாய் எண்ணுகிறாளே தவிர, பத்திரிகையாளனாக ஆக வேண்டும் என்று எண்ணுவது இல்லையே, ஏன்?

அதெல்லாம் பழைய கதை. இப்போது மீடியா சம்பந்தப்பட்ட படிப்புகள் பிரபலமாகிவிட்டன. அந்தக் காலத்தில் இந்த வசதிகள் கிடையாது. பத்திரிகையாளன் என்றால், 'திக்குத் தெரியாத காட்டில் திசைமாறிப் போகிறவன்' என்று பெற்றோர் கவலைப்பட்டனர். போகிற வழியில் என்ன நிகழுமோ, பணம் சம்பாதிக்க முடியுமா என்கிற சந்தேகங்கள் வேறு அம்மாவுக்கு இருந்திருக்கும். ஒரு விஷயம், சிறந்த இன்ஜினீயராகிவிடலாம். சிறந்த பத்திரிகையாளர் ஆவது சாதாரண சாதனை அல்ல!

அ.குணசேகரன், புவனகிரி.

போலி சாமியார், மருந்து, மாத்திரை, மருத்துவர் எனத் தொடர்ந்து, போலி மதிப்பெண்பட்டியல் வரை... போலிகளின் பட்டியல் நீள்கின்றனவே?

உண்மைதான்! ஏதோ நம்மைப் பொறுத்தவரையில் 'போலி கேள்வி-பதில்'கள் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

நண்பன் எதிரிபோல நடந்துகொண்டால், நாம் என்ன செய்ய வேண்டும்?

எதிரி நண்பன்போல் நடந்துகொண்டால்தான் ஆபத்து. நண்பன் எதிரிபோல் நடந்துகொண்டால், அவன் உங்களுக்குக் குட்டுவைத்து, தட்டிக் கேட்டு, குற்றம் குறைகளைச் சொல்லிக் கடுப்பேற்றுகிறான் என்று அர்த்தம். அதாவது, அவன் நல்ல நண்பன் என்று தோன்றுகிறது!

என்.எம்.விக்னேஸ்வர், பெங்களூரு.

சுவிஸ் வங்கிகள், இந்திய அரசு கேட்டால் தங்கள் வங்கிகளில் பணம் போட்டு இருக்கும் இந்தியர்கள்பற்றிய தகவல்களைத் தரத் தயார் என்று சொல்லியிருக்கிறதே? தகவல்கள் வெளிவருமா? (எனக்குத் தெரிந்துகொள்ள ரொம்ப நாளாகஆசை!).

உங்கள் ஆசை நிறைவேற சான்ஸே இல்லை! அதாவது, வரி ஏய்ப்பவர்களைப்பற்றி கேட்டால் (மட்டும்!) தகவல்கள் தருவதாகத்தான் சொல்லி இருக்கிறது. 'எல்லா

நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்

தகவல்களையும் தரத் தயார்!' என்று சுவிஸ் வங்கி சொன்னால், மத்திய அரசே கதி கலங்கிப்போய் 'ஐயோ, வேண்டாம்!' என்று சொல்லி விடும். என்ன பெரிய பணம்?! அங்கே இந்தியர்கள் 'பதுக்கி இருக்கும் கறுப்புப் பணம் ஜஸ்ட் ஒன்றரை ட்ரில்லியன் டாலர்கள்தான்! ஒரு ட்ரில்லியன் (Trillion) என்பது ஆயிரம் பில்லியன் (Billion). ஒரு பில்லியன் என்பது 100 கோடி. மொத்தமாக சுமார்

நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்

50 லட்சம் கோடி! வறுமை நாடா இந்தியா?!

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

சாகும் வரையிலும் மனசாட்சியின் உறுத்தல் இன்றி இருப்ப வர்கள் உண்டா?

சாகிற தருணத்தில் மனசாட்சி ஒருவரை உறுத்தினால்... அது நமக்கு எப்படித் தெரியும்? கண்களில் நீர் வழிய இறப்பவர்கள் உண்டு. அந்தக் கண்ணீர் எதற்காக?! தெரிந்துகொள்ள முடியாது!

நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்
நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன? - ஹாய் மதன்-கேள்வி பதில்