சிக்மென்ட் ஃப்ராய்ட் சொன்ன பதில்தான் உலகை உலுக்கிய முதல் பதில்... எல்லா ஆண் குழந்தைகளுக்குமே தன் தாய்தான் முதல் காதலி. இரண்டு, மூன்று வயதில் இவளை ரசித்து, இவள் எனக்கே எனக்குத்தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் ஆண் குழந்தைகள். இதை எடிபெஸ் காம்ப்ளெக்ஸ் என்றார் ஃபிராய்ட். அநேகமான ஆண்கள் ஐந்து ஆறு வயதிலேயே இந்த எடிபெஸ் காம்ப்ளெக்ஸில் இருந்து மீண்டுவிடுகிறார்கள். அம்மா என்பவள் அப்பாவின் மனைவி, நான் வளர்ந்து அப்பாவைப்போலப் பெரியவன் ஆன பிறகு எனக்கே எனக்கென்று வேறு ஒருத்தி வருவாள் என்கிற புரிதலுக்கு மாறுகிறார்கள். ஆனால், சில ஆண்கள் இப்படி மீளாமல் தொடர்ந்து அம்மாவையே ஓவராக நேசிக்கிறார்கள். எடிபெஸ் காம்ப்ளெக்ஸில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றார் ஃபிராய்ட்.அடுத்த பதிலைச் சொன்னவர் ஹாரி ஹார்லோ என்கிற அமெரிக்க விஞ்ஞானி. இவர் குரங்குகளைவைத்து, தாய் - சேய் உறவுபற்றிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். இவர் தன் ஆராய்ச்சியில் குட்டிக் குரங்கைப் பிறந்த உடனே தன் தாயிடம் இருந்து பிரித்து வளர்த்தார். ஆனால், வேளா வேளைக்கு உணவையும் விளையாட்டுப் பொருட்களையும் கொடுத்து ஊக்குவித்தார். இப்படித் தன் தாயைச் சந்திக்காமலேயே தனிமையில் வாழ்ந்த இந்தக் குரங்கு, பிற்காலத்தில் பிற குரங்குகளுடன் எப்படிப் பழகுகிறது என்று சோதித்துப் பார்த்தால், ஊஹூம்... மற்ற குரங்குகளின் பக்கத்திலேயே போகவில்லை குட்டி. சரி, மற்ற குரங்குகளுடன்தான் விளையாடவில்லை. குறைந்தபட்சம் பெண் குரங்கைக் கண்டால் கூடவாவது தோன்றுகிறதா என்று பார்த்தால், ஊஹூம், பெண்ணை சீண்டக்கூட விரும்பவில்லை இந்த விசித்திரக் குட்டி. இதில் இருந்து ஹார்லோ கண்டு பிடித்த விஷயங்கள்... தாய் - சேய் உறவுதான் குழந்தையின் சமூகப் பழக்க வழக்கங்களுக்கும், எதிர் காலக் காம உறவுக்கும் ஆதாரம். அப்பா இல்லை என்றால் நஷ்டம் இல்லை. ஆனால், அம்மா இல்லை என்றால் முதலுக்கே மோசமாகி விடும். அதனால், குரங்குகளில் மட்டுமல்ல, எல்லா உயிரினத்திலும் தாய் வழியாகத்தான் சமூகம் அமைகிறது. மனிதர்கள் உட்பட. இதுதான் இயற்கையின் விதி.இதை நிரூபிப்பதுபோல லண்டன் ஜூவில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஜூவின் காப்பாளர் டெஸ் மண்ட் மோரிஸுக்கு அப்போது குழந்தை இல்லை. அதனால் அவர் மனைவி அங்கே இருந்த காங்கோ என்கிற குட்டி சிம்பன்ஸியைத் தன்னுடனேயே வைத்து, வளர்க்க ஆரம்பித்தார். காங்கோ சட்டை போட்டுக்கொள்ளும், ஸ்பூனில் சாப்பிடும், கழிப் பறையைப் பயன்படுத்தும். அவ்வளவு ஏன்... மிக அற்புதமாக ஓவியம் வரையும். காங்கோ வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியில் |