ரிக்ஷாக்காரருக்கு லாட்டரியில் பணம் விழுந்தது மட்டும்தான் நமக்குத் தெரியும். அவர் எவ்வளவு நாளாக லாட்டரிச் சீட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார்? பரிசு விழ வேண்டும் என்பதற்காக என்னென்ன மாதிரியான சீட்டுகளை வாங்கினார்? சீட்டு வாங்குவதில் அவருக்கு இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு என்ன மாதிரியான உத்திகளைக் கையாண்டார் என்பதெல்லாம் நமக்குத் தெரி யாது.
நமக்குத் தெரிந்த, நாம் கவனிக்கிற அல்லது, நாம் போட்டியாக நினைக்கிற ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால், 'அவருக்கு அதிர்ஷ் டம்' என்று ஒற்றை வரியில் சொல்லி, அந்த விஷயத்தை முடித்துவிடுவது நமக்கு எளிதாகி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், நமது சொந்த ஈகோவை சாத்வீகமாகச் சமாதானம் செய்யும் முயற்சிதான் அது.
அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக போட்டி போட்டு நாம் எதையும் செய்யத் தேவை இல்லை. ஆனால், அதிர்ஷ்டம்தான் இன்னொருவனை ஜெயிக்கவைத்தது என்பது உண்மையானால், நாம் ஜெயிக்கவும் அந்த அதிர்ஷ்டம்தானே கைகொடுக்க வேண்டும்?
அதிர்ஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் வாய்க்கும். அதை ஜாதகக் கட்டங்கள் தீர்மானிப்பது இல்லை. நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்களோ... அதற்கு உரிய, சரியான தயாரிப்புகளோடு முன்னேறிக் கொண்டு இருந்தால், அதிர்ஷ்டம் தானாக வந்து சேரும்.
உண்மையில் தயாரிப்புகளும் வாய்ப்புகளும் சந்திக்கிற புள்ளிதான் அதிர்ஷ்டம். தேவையான தயாரிப்புகள் இன்றி, வாய்ப்புக் கதவைத் தட்டக்கூட அலுத்துக்கொண்டு, எதிர் வீட்டுக்காரனுக்கு அதிர்ஷ்டம் என்று அங்கலாய்த்துக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
என் இலக்கை எட்டுவதற்கான தயாரிப்புகள், ஏற்பாடுகளில் நான் கடினமாகவே முனைகிறேன். அதுவரை என் பணி முடிந்துவிட்டது. ஆனால், வாய்ப்பை யார் தருவது? சோர்வு இல்லாமல் தொடர்ந்து அந்தப் பய ணம் நடக்கிறபோது வாய்ப்பு நிச்சயமாக வந்து சேரும்.
டி.வி-யில், ரேடியோவில், பத்திரிகையில், நிகழ்ச் சித் தயாரிப்பாளராகவோ, நிகழ்ச்சி நடத்துநர் ஆக வோ, இன்ன பிற பணிகளுக்காகவோ அவ்வப்போது யாராவது கேட்டு இருப்பார்கள். திடீர் என்று யாரா வது ஒரு நண்பர் இந்தக் குறிப்பிட்ட வேலைக்கு ஆள் வேண்டும். நல்ல திறமைசாலி இருந்தால் சொல்லுங்களேன் என்று கேட்பார். எவர் வேலை தொடர்பா கத் தொடர்ந்து நம்மிடம் முயற்சித்துக்கொண்டு இருந்தாரோ, அவருடைய ஞாபகம்தான் அப்போது வரும். அதுதான் யதார்த்தமும்கூட!
|