Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

கால்பந்து ராத்திரிகள்!

தலையங்கம்

சிவராத்திரி, நவராத்திரி என்பதுபோல கடந்த ஒரு மாதமாக 'கால்பந்து ராத்திரிகள்' - நம்மை பரபரப்புக் கலந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. கடைசி இரவான - கடந்த ஞாயிறன்று இத்தாலிக்கும் பிரேஸிலுக்கும் இடையே நடந்த விறுவிறுப்பு நிறைந்த போட்டி மெய்மறந்த நிலைக்குத் தள்ளிற்று! தங்கக் கோப்பையை பிரேஸில் வீரர்கள் கையில் பெற்று மகிழ்ச்சியுடன் குதித்தபோது, போட்டி முடிவுக்கு வருகிற வருத்தமும் கூடவே ஏற்பட்டது!

அமெரிக்காவில் நடந்த போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு, விஞ்ஞானத்தின் சாதனை! தொலைக்காட்சி என்ற இந்த விஞ்ஞான சாதனம் மூலம் அறிவுக்கண்கள் மட்டும் திறக்கப்படுவதில்லை; சாதனை புரியும் தாகமும் ஏக்கமும் லட்சியமும்கூட அதனால் ஏற்படுத்திக் காட்டமுடியும்.

உலகக் கால்பந்துப் போட்டியையும் அந்தத் திடகாத்திரமான வீரர்களையும் பார்த்தபோது, 'விளையாட்டில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்' என்ற ஏக்கம் ஏற்படாமல் இல்லை. ஒருவேளை நம் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் இந்த ஏக்கம் உண்டாகி, விளையாட்டை ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டால்... இந்தக் கற்பனையே மகிழ்ச்சியைத் தருகிறது! இளைஞர்களுக்கோ, குறிப்பிட்ட சில வீரர்களைப்போல தாங்களும் உலகப்புகழ் பெற வேண்டும் என்ற லட்சிய வெறி ஏற்படுமானால்... எத்தனை உற்சாகமான விஷயம் அது!

இன்னொருபுறம் பார்த்தால் - உலகமே அந்த இரண்டு மணி நேரம் வேறு சிந்தனை இன்றிக் குதூகலமாக இயங்கியது. சொல்லப்போனால், உலக சமாதானத்துக்கே அதன் மூலம் வழி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

எப்படிப் பார்த்தாலும், ஒரு மாதம் நடந்த உலகக் கால் பந்துப் போட்டி பெருமைக்கு உரியது!

தலையங்கம்
தலையங்கம்