"இவ்வளவு பேர் இங்கே நிற்பது என்னவோபோல் இருக்கிறது. சிரிப்பு வரவில்லை. செட்டில் யாரும் இருக்கக்கூடாது. எல்லோரையும் போகச் சொல்லிவிடுங்கள்" என்று டைரக்டரிடம் சொன் னேன். கலைஞர், மாறன் ஆகியோ ரும் அப்பொழுது இருந்தார்கள்.
"நாங்களும் கூடப் போய்விடட்டுமா?" என்று கலைஞர் கேட்டார். "இல்லை... இல்லை. ஒரேயடியாகக் கூட்டம் போட்டிருந்தவர் களைத்தான் சொன்னேன்" என்றேன்.
எப்படியோ ஒரு துணிவும் உத்வேகமும் ஏற்பட்டது. தர்பார் சீனில் நிற்கும் கண்ணகியாக மாறினேன். அவ்வளவுதான்... அந்த சீன் வெற்றிகரமாக அமைந்தது.
சிரிப்பதற்கு அந்த நேரம் அப்ப டிச் சிரமப்பட்டேன். அதை நினைத் துப் பார்த்தால் இப்போதும் சிரிப் பாகத்தான் இருக்கிறது.
|