பெருமைமிக்க இந்தக் கோபு ரத்தைக் கட்டிமுடித்த ஸ்தபதி சிவப்பிரகாசத்தைச் சந்தித் தோம்.
"கோபுரம் லேசா பூமிக்குள் இறங்கி இருப்பதாகச் சொல்றது உண்மைதான். எப்பவுமே கட்ட டம் கட்டி முடிச்சபிறகு, சில இடங்களில் லேசாகக் கட்டடம் பூமியில் புதையறது சாதாரண விஷயம்தான். அது ஒருமுறைதான் நடக்கும். அதுக்குப் பிறகு புதைய வாய்ப்பே இல்லை. கல்ஹார சுவத்தில்கூட ஒரு சில கருங்கற்கள் 'க்ராக்' ஆகியிருக்கு. அதைப் பார்த்து யாரும் பயப்படவேண்டி யதில்லை. 70 அடி வரைக்கும் தோண்டிப் பார்த்தோம். அந்த ஏரியாவில் தண்ணியே இல்லை. அந்த கல்ஹாரத்தோட ஸ்ட்ரெங்த் துக்கு இன்னும் 30 அடி உயரம்கூட கோபுரத்தைக் கட்டலாம்; ஒண் ணுமே ஆகாது. அரசு அதிகாரிகள் வீணாகக் கவலைப்படறாங்க. அதைக் காப்பாற்றப் போறேன்னு கோபுரத்தின் கீழே தோண்ட ஆரம்பிச்சாதான் ஆபத்தே இருக்கு. அதைத் தொந்தரவு செய் யாம இருந்தாலே போதும்... எந்த இடையூறும் வராது" என்று உறுதியோடு சொல்லி முடித்தார் சிவப்பிரகாசம்.
ஆனால், இப்போது கோபுரத்தின் நிலைமையைப் பார்வை யிட்ட இன்ஜினீயர்கள் குழு, இரண்டு யோசனைகளைத் தெரிவித்திருக்கிறது.
1. கோபுரத்தைச் சுற்றி (வீடுகள், கடைகள் சிலவற்றை அகற்றிவிட்டு) ஜாக்கெட் கவர் செய்து, அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது.
2. திரவ சிமென்ட் கலவையை (cementity) அஸ்திவாரத்தின் கீழ் இன்ஜெக்ஷன் செய்து, அஸ்தி வாரத்தைப் பலமாக்குவது.
கோபுரத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கிற திட்டமும் பெயரளவில்தான் இருக்கிறது.
கோபுர விரிசல்கள் பெரிதாகின் றனவா என்பதைப் பரிசோதிக்க பதிக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் லேசாக நகர்ந்திருக்கின்றன. கோபுரத்தையட்டி கட்டப்பட்டிருந்த ஒரு ஓட்டலும் லேசாக கல்ஹாரத்தோடு சேர்ந்து பூமியில் இறங்கியிருக்கிறது.
இந்து அறநிலையத்துறை கமிஷனர் சாவர்க்கரை சந்தித் தோம்.
"கோயில் கோபுரம் நல்லாத் தான் இருக்கு. எதுனாச்சும் இருந்தா சொல்லி அனுப்பறேன்" என்றார் படுகூலாக!
கடிதங்கள்
உலகக் கோப்பை கால்பந்து நடைபெறும் இந்தச் சமயத்தில் கால்பந்து போட்டி சம்பந்தமான தகவல்களைத் திரட்டித் தந்தது சிறப்பு. இதில் பல தகவல்கள் எனக்குப் புதுசாக இருந்தன.
- ஆர்.முத்துமாணிக்கம், திருவிடைமருதூர்.
நீங்க விபரீதமா கேள்விகளைக் கேட்டிருந்தாலும், டி.ராஜேந்தர் அசராமல் அளித்த பதில்களில் தன்னம்பிக்கை மிளிர்ந்ததைக் கண்டு அசந்தேன்!
- எம்.ராகவன், பாண்டிச்சேரி-6
கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க கம்பராமாயணப் புத்தகம் உண்மையிலேயே ஒரு சீரிய முயற்சி! உண்மையான தமிழ்த் தொண்டு இதுதான். நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் பாராட்டுக்குரியவர். காலப்பெட்டகத்தில் இது பற்றிப் படித்தபோது, பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன்.
- எஸ்.சுகுணா ராம்குமார், வேலூர். |
|