பத்து லட்ச ரூபாய் பணம் கிடைக்கும்; ஆனால், நாளையிலிருந்து பெண்ணாகிவிடுவீர்கள். இஷ்டமா?
அஞ்சு லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு அர்த்தநாரியாக இருக்கலாமா, கூடாதா? சரி, விடுங்க... 'கிரேஸி'மோகன்கிற பெயரை 'ரோஸி'மோகன்னு மாத்திக்கலாம். என்னோட நாடகக் குழுவில நானே லேடி ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சுடலாம். ஒரு செலவு மிச்சம்!
உங்கள் வீடு திடீரென்று தீப்பற்றி எரிகிறது. வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு பொருளை மட்டும் வெளியே எடுத்துவர உங்களுக்கு சான்ஸ்! எதை எடுத்து வருவீர்கள்?
நிதானமா ஸ்லோமோஷன்ல உள்ளே போய், என் தங்கையோட வயலினை எடுத்துக்கொண்டு வருவேன். வெளியே வந்ததும், அந்த வயலினை வாசிப்பேன். 'ரோம் நகரம் பத்தியெரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசிச்சான்'கற மாதிரி, 'வீடு தீப்பிடிச்சு எரியும்போது கிரேஸி மோகன் வயலின் வாசிச்சான்'னு சரித்திரத்துல என் பேரு பொறிக்கப்படும் இல்லியா!
பேய் உலாவுகிறது என்று நம்பப்படும் ஒரு காட்டு பங்களாவில் ஓர் இரவு முழுக்கத் தனியாக இருக்கவேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டால், டிஸ்னிலாண்டுக்குக் குடும்பத்தோடு ஒரு இலவச ட்ரிப் உண்டு. ஓகே-வா?
நான் ஆவலோடு பார்க்க விரும்பும் விஷயங்கள் இரண்டு... ஒன்று - பேய்; இன்னொன்று - டிஸ்னிலாண்ட். ஹைய்யா..! ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!
|