சந்தர்: கூட யார்? சரோஜாதேவியா?
சேகர்: அமர்க்களம் போ! கிராமத்துப் பெண்ணா வந்து ரொம்பத் துடுக்கா நடிக்கிறார்.
சந்தர்: சிரிப்புக்கு யாரு?
சேகர்: தங்கவேலுதான். அவர் கடைசியிலே போலீசுக்குப் போன் செய்யற ஒரு இடமே போதுமே!
சந்தர்: பாட்டுக்கள் எப்படி?
சேகர்: பட்டுக்கோட்டை கல் யாணசுந்தரம் போட்டிருக்கிற 'திருடாதே, பாப்பா திருடாதே' பாட்டு, நல்ல கருத்தோடு அமைந்திருக்கு. அதே போல, பாழ் மண் டபத்திலே காதல் காட்சியும், கடைசியிலே இருட்டறையிலே எம்.ஜி.ஆரும் நம்பியாரும் சண்டை போடற காட்சியும் புதுமையா இருந்தது.
சந்தர்: நீ சொல்வதைப் பார்த்தா, படம் நல்லா ஓடும் போல இருக்கே?
சேகர்: ஓடறதுக்காகத்தானே திருடியிருக்காங்க!
|