பயணத்தை முன்னெடுக்கிறார்கள். ஆனால், இங்கே இன்னும் பெரும்பாலானவர்கள் வீட்டிலும் தன் கடமை களைச் செய்யாமல், சமூகத்துக்கும் எந்த வகையிலும் பயன்படாமல் தங்கள் நாளையும் பொழுதையும்வீணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 'நமக்கு ஏன் இந்தத் தேவை இல்லாத வேலை?' என்று பகத்சிங், பாரதி போன்றவர்கள் நினைத்து இருந்தால்... இன்று வரை இந்தியர்கள் அடிமை களாகத்தான் இருந்திருப்பார்கள்.
இன்று ஒரு சொடுக்கில் உலகம் உங்கள் உள்ளங்கைகளில் விரிகின்றது. உலக வல்லரசுகள், இந்தியா போன்றவை ஈழத்தில் நடந்த கொடுமைகளை மறைத்தபோது இணையதளம் மூலமாகப் பல உண்மைகள் வெளிவந்தன. சிறந்த இந்தத் தகவல் பரிமாற்ற ஊடகத்தை எத்தனை இளை ஞர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்?
சமூகத்தின் மேல் ஈடுபாடு, தன் கடமையை உணர்தல், தனக்கான தத்துவம் எது என்று கண்டுபிடித்தல், அதைப் பின்பற்றுதல், நிறைய வாசிப்பு ஆகியவை மூலம் ஒரு இளைஞன் சமூகத்தின் அவலங்கள், வளர்ச்சிகள், மாற்றங்கள் சார்ந்த பார்வையை ஏற்படுத்த முடியும். சமூகத்துக்குத் தன் பங்களிப்பைச் செய்ய முடியும். சுயநலம் இல்லாத தலைவர்களைத் தங்களின் வழிகாட்டிகளாக இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்!" என்று தன் பார்வையை முன்னிறுத்துகிறார்.
வழக்கறிஞர் அருள்மொழி எதையும் பொது நலமாகப் பார்க்க அறிவுறுத்துகிறார். "சமூக அக் கறை, பொதுநலம் ஆகியவற்றைப் பற்றிய தவறான எண்ணம் இருக்கிறது. பொது நலனில் சுயநலமும் கலந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டுக் குழாயில் நீர் வராதபோது, தெருவில் சாக்கடை அடைபடும்போதுதான் நீங்கள் சமூகத்தைப்பற்றிச் சிந்திக்கிறீர்கள். இது மட்டும் போதாது. விலைவாசி, அடிப் படைச் சட்ட திட்டங்கள், வரலாற்றுப்பிழை கள், வெளியுறவுத் துறைக் கொள்கைகள் என இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றன. பிரச்னைகளின் பின்புலம்பற்றித் தெரிந்து இருப்பதும், இணைந்து செயலாற்றுவதும் தான் சமூக முன்னேற்றத்தில் இளைஞர் களின் அடிப்படைப் பங்களிப்பாக இருக்க முடியும்!" என்கிறார்.
"எமர்ஜென்ஸி காலத்தில் இருந்த வேகமோ, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்த வீரமோ இன்றையஇளை ஞர்களிடத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம்" என்று ஆதங்கம் கலந்த கோபத்துடனேயே ஆரம்பிக்கிறார் மருத்துவரும், தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் தலைவரு மான நா.எழிலன். "16 வயது முதல் 26 வரை வயதுள்ள இன்றைய இளைஞர்களை உளவியல் ஆய்வுக்கு உட் படுத்தினார்கள். 1979-89, 89-99 காலகட்டங்களுடன், 99-2009 காலகட் டத்தை ஒப்பிடும்போது சமூக அக்கறை தற்போதைய தலைமுறையினரிடையே 40 சதவிகிதமாகக் குறைந்து இருப் பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய போராட்டம் வேலை தேடுவது. அதற்கடுத்த போராட்டம் கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்வது. 24 மணி நேரமும் தங்களின் தேவைகளுக்காக உழைக்கிற சூழலில் சமூகம் பற்றிச் சிந்திப்பதற்கு அவர் களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? சமூகத்தில் நிகழ்கிற பிரச்னைகளுக்கான காரணங்கள், அதன் விளைவுகள்பற்றி ஆய்வுகள் நடத்திப் பார்ப்பதும், இளைஞர்கள் எந்த ஒரு தவறான பாதையையும் தேர்ந்தெடுத்துவிடாமல் அவர்களை நல்வழிப்படுத்துவதும் இப்போதைய தேவை. இவற்றைத் தனி மனிதனாகச் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. ஆகவே இயக்கமாக மாறுங்கள்!" என்கிறார் எழிலன்.
ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பு 'மே 17'. அந்த தினத்தில்தான் ஈழத் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டதால், இயக்கத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அதன் தலைவர் திருமுருகன், "இன்று பாடப் புத்தகங்களின் வழியாகத்தான் இளைஞர்கள் சமூகத்துக்குள் வருகிறார்கள். மனரீதியாகவோ அல்லது அறிவுசார் அடிப்படையிலோ அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. களத்தில் இறங்கும்போதுதான் சமுதாய அறிவு வளரும். சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் பயணத்தில் இளைஞர்களின் கல்வி, வேலை, குடும்பம் ஆகியவை எந்த விதத்திலும் பாதிப்பு அடையப் போவது இல்லை!" என்று மிக முக்கியமான கருத்தை முன் வைத்துப் பேசுகிறார். "மூத்த குடியாம் தமிழ்க் குடியில் சுமார் லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டார் கள். அதன் மிகச் சரியான எண்ணிக் கையை ஆதாரபூர்வமாக வெளியிட் டது எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான். இலங்கையில் நடந்த திரைப்பட விழாபற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் விளைவுகள்பற்றியும் தெரிவித்தது இந்த இயக்கத்தின் இளைஞர்கள்தான். இளைஞர்களுக்கு இன்று மிகவும் தேவை எதிர்த்துப் போராடும் போராட்ட குணம்தான்!" என்கிறார் இவர் அழுத்த மாக.
|