நம் நாட்டில் ஊழல்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் சரி. தண்டிக்கப்படுவது இல்லையே, ஏன் சார்?
ஏழை கிளார்க் ஆக இருந்தால்தான் தண்டிக்கப்படுவார். ரொம்பப் பெரிய 'தலை'களாக இருந்தால், ஊழலைக் கண்டுபிடித்தாலே தண்டிக்கப்பட்ட மாதிரிதான் என்று மேலிடங்களில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. பெரிய பதவி கிடைத்துவிட்டால், நீங்கள் ஊழலே பண்ண வேண்டாம். ஊழல் பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு மழைபோலக் கொட்டும். நீங்கள் பெரிய கூடை ஒன்றைக் கீழே வைத்துவிட்டால் போதும்!
விஜயலட்சுமி, சென்னை-74
மனைவியை ராணி மாதிரி வைத்திருப்பவர் ராஜா மாதிரி இருக்க வேண்டுமா... சேவகன் மாதிரி இருக்க வேண்டுமா?
கணவன் சேவகம் செய்தால் மனைவி ராணி மாதிரி உணர்வாள் என்பது உண்மையே. ராஜா மாதிரி என்றால்? அப்போது நிஜமாகவே மனைவி ராணிதான். ஆனால், 100 மனைவிகளில் அவளும் ஒருத்தி. ராணிக்குப் பரவாயில்லை என்றால் ஓ.கே!
வி.எஸ்.சுதர்சனம், நங்கநல்லூர்.
டென்னிஸ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் என்ற பிரிவு இருப்பதுபோல, கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள், பெண்கள் இருவரும் கலந்து விளையாடுவது இல்லையே, ஏன்?
எதிர்காலத்தில் அப்படி நடந்தால், முதன்முதலில் இந்த ஐடியா தரப்பட்டது 'ஹாய் மதன்' பகுதியில்தான் என்று கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடுவார்கள். இந்த ஒரே காரணத்துக்காக உங்கள் கேள்வியை இங்கே வெளியிட்டு இருக்கிறேன்!
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
யானைகள் புத்திசாலி மிருகங்கள்தானே... பிறகு, எப்படி ரயிலில் அடிபட்டுச் சாகின்றன?
|