"பொதுவாக சாதாரண சருமம்(நார்மல்), வறண்ட சருமம், எண்ணெய்ப் பசை சருமம், எல்லாம் கலந்த சருமம் (காம்பினேஷன்) என்று நான்கு வகையான சருமங்கள் இருக்கின்றன. இவற்றில் காம்பினேஷன் என்பது நெற்றி, மூக்கு போன்ற இடங்களில் மட்டும் எண்ணெய் வடிவதாக இருக்கும். உங்களுக்கு எண்ணெய்ப் பசை சருமமா அல்லது காம்பினேஷன் சருமமா என்று தெரியவில்லை. மாத்திரைகள், ஃபேஸ் வாஷர்கள் உபயோகிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். உங்களின் வயது, உடல் நிலை ஆகியவற்றைப் பரிசோதித்த பிறகு, மருத்துவர்கள் உங்களுக்குத் தகுந்த மாத்திரைகளைக் கொடுப்பார்கள். ஏனெனில், அவை பக்க விளைவுகளைக்கொண்டது. சாலிசிலிக் (salicylic acid) அமிலம் உள்ள ஃபேஸ் வாஷ்களை உபயோகிப்பது நல்ல பயனைத் தரும். எக்காரணம் கொண்டும் மாய்ஸ்சரைஸர்கள் பயன்படுத்த வேண்டாம். க்ரீம் களைத் தவிர்த்துவிடுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பது, அவ்வப்போது முகம் கழுவுவது ஆகியவற்றால் தற்காலிகமாக இப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்!"
மீ.அசோக்குமார், குடவாசல்.
"நான் புகைப் பழக்கம் இல்லாதவன். நண்பர்களோடு அவுட்டிங் செல்லும்போது புகைப் பிடிக்கச் சொல்கிறார்கள். நானும் நண்பர்களின் சந்தோஷத்துக்காகப் புகை பிடிக்கிறேன். புகைப் பழக்கம் தவிர, மற்ற எல்லாவிதத்திலும் அவர்கள் நல்ல நண்பர்கள். அவர்களையும் இழந்துவிடாமல் இந்தப் பழக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?"
டாக்டர் திருநாவுக்கரசு,மனநல மருத்துவர்.
|