என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!

குடித்துவிட்டு கியர் மாற்றாதே!

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டால், ஆம்புலன்ஸின் சைரன் ஒலிக்கு முன்பே, சத்தம்இல்லாமல் வந்து நிற்கும் ஒரு டெம்போ வேன்!

விபத்தில் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது, உரிமை கோரப்படாத சடலங்களை அடக்கம் செய்வது போன்ற சேவைகளை தன்னார்வத்துடன் செய்து வருகிறார் டிரைவர் ராஜகோபால். ''இதுவரை அடையாளம் தெரியாத 20 சடலங்களை அடையாளம் கண்டு, முகவரி தேடி, அவங்க உறவினர்களிடம் கொண்டு சேர்த்திருக்கேன். 500-க்கும் அதிகமான அநாதைப் பிணங்களை அடக்கம் பண்ணியிருக்கேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, இரவி புதூர்க் கடைக் கால்வாயில் ஒரு வாலிபர் இறந்துகிடந்தார். ரொம்பக் கஷ்டப்பட்டு பாடியை எடுத்து கரையில் போட்டேன். அப்போ அவர் பாக்கெட்ல ஒரு குவார்ட்டர் பாட்டில் இருந்துச்சு. பாடியைத் தூக்க யாருமே வரலை. நான் போய் வண்டி எடுத்துட்டு வந்து பார்த்தா, சட்டைப் பையில் இருந்த குவார்ட்டர் பாட்டிலை மட்டும் காணோம். எப்படி இருக்காங்க பாருங்க மனுஷங்க?'' என்கிற ராஜகோபாலின் ஒரே வேண்டுகோள் இது... ''குடிச்சிட்டு வண்டி ஓட்டாமல் இருந்தாலே, பாதி விபத்துக்கள் குறைஞ்சிரும். தயவுசெய்து குடிக்காதீங்க. குடிச்சா... வண்டி ஓட்டாதீங்க!''

- என்.சுவாமிநாதன் படம்: சொ.பாலசுப்ரமணியன்

"ஐ லவ் விருதுநகர்!"

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!

டந்த 7-ம் தேதி விருதுநகரைச் சேர்ந்த பி.எஸ்சி., பட்டதாரி சிவக்குமாருக்கும், ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா மெர்சிடஸுக்கும் திருமணம்!  ''துபாய்லதான் எனக்கும் மரியாவுக்கும் அறிமுகம். ஆரம்பத்தில் இருந்தே மரியாவுக்கு என் மேல் ரொம்ப அக்கறை. மரியாவை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டப்போ, எங்க வீட்ல பெரிய எதிர்ப்பு. போன வருஷம் மரியாவை விருதுநகருக்குக் கூட்டிட்டு வந்தேன். கொஞ்ச நாட்கள் எங்க வீட்ல தங்கவெச்சேன். பெரியவங்ககிட்ட மரியா மரியாதையா பழகினதைப் பார்த்து, என் அப்பாவுக்கு ரொம்பச் சந்தோஷம். உடனே, எங்க கல்யாணத்துக்கு 'ஓ.கே’ சொல்லிட்டார். கிட்டத்தட்ட 'சந்தோஷ் சுப்ரமணியம்’ படக்கதைதான்!'' என்று சிரிக்கிறார் சிவக்குமார். ''கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?'' என்று மரியாவிடம் கேட்டால், ''எங்க நாட்டில் கல்யாணம்னா, 30 பேர் முன்னாடி மோதிரம் மாத்துவோம். ஆனா, இங்கே 500 பேர் வர்றாங்க. வீடே ஃபெஸ்டிவல் எஃபெக்ட்ல இருக்கு. கல்யாணம் அன்னிக்கு நிறைய நகைகள் அணிந்து,  பட்டுப்புடவை கட்டினேன். ரொம்ப ஜாலியா இருந்தது. ஐ லவ் விருதுநகர்!'' என்கிறார் புது மணப் பூரிப்புடன்!  

-எம்.கார்த்தி படம்: என்.ஜி.மணிகண்டன்

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ளது செங்குடி பஞ்சாயத்து. இதன் தலைவர் சூசை. பஞ்சாயத்து தலைவராகப் பதவி வகித்தாலும், மாலை நேரத்தில் நோட்டு, புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவார் சூசை. புனித மிக்கேல் உயர்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்துகிறார் சூசை. இந்தச் சிறப்பு வகுப்பின் மூலம் மேல் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் இலக்கணப் புரிதலுடன் ஆங்கிலத்தில் கூடுதல் மதிப்பெண்களும் பெறுகின்றனர். அதோடு, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சாயத்து நூலகத்துக்குத் தினமும் மாணவர்களை அழைத்துச் செல்கிறார் சூசை. அங்கு நீதிக் கதைகள், தேசத் தலைவர்களின் வரலாறு குறித்த புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுத்து படிக்கவைக்கிறார். வில்லங்கங்களையும் விவகாரங்களையும் தீர்ப்பதை மட்டுமே வேலையாகக்கொண்டு இருக்கும் பஞ்சாயத்துத் தலைவர்களின் மத்தியில், சூசை... வித்தியாசமான தலைவர்!  

- இரா.மோகன் படங்கள்: உ.பாண்டி

பாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்!