3. கள்ளத்தனமாக, ரகசியமாக வேறு ஓர் ஆணுடன் கூடி, அவன் மூலமாகத் தன் காரியங்களைச் சாதித்துக்கொள்வாள்.
4. இப்படிப் பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ தன் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அமையாத பெண், என்ன செய்வாள்? தன் மகனை வைத்தே தன் எல்லா nonsexsual தேவைகளையும் தீர்த்துக்கொள்வாள். பல இந்தியக் குடும்பங்களின் நிலை இதுதான். 'இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? இந்த ஆள் சுத்த வேஸ்ட். நீயும் அப்படி இருந்துடாதேடா. அம்மா உன்னை நம்பித்தான் இருக்கேன். என் பிள்ளைதான் என்னைக் கரை சேர்க்கணும்' என்று புலம்பி, அழுதுவைத்தால் போதும். பையனுக்குத் தாய்ப் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அம்மா கஷ்டப்படும்போது நான் மட்டும் எப்படி என் பொண்டாட்டியோடு தனியா ஹனிமூன் போறது?' என்று அங்கேயும் அம்மாவை மடியில் கட்டிக்கொண்டு அழும் ஆண்களும் நம் ஊரில் உண்டு.
இந்த ஆடவர் குலத் திலகங்களுக்குத் தெரிவதே இல்லை, இவர்கள் இப்படி அரும்பாடுபட்டு வீடு, வசதி, புடவை, நகை, உணவு, ஊருலா என்று ஆற்றுவது எல்லாம் ஒரு மகன் தன் தாய்க்குச் செலுத்தும் நன்றி அல்ல; ஒரு கணவன் கொண்டவளுக்குச் செய்யும் கடமை என்று.
இப்படித் தன் ஆண் குழந்தையைக் கணவன் ஸ்தானத்துக்கு உயர்த்தி, அவன் மூலமாகத் தன் பவர் தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளம். காரணம், மறுமணம் செய்துகொள்ளும் சுதந்திரமோ, கள்ள உறவு வைத்துக்கொள்ளும் தைரியமோ, நம் பெண்களுக்குப் பெரும்பாலும் இருப்பது இல்லை. அதனால், தங்கள் மகனை வைத்தே தங்கள் ஆட்டத்தை ஆடி முடிக்கப் பார்க்கிறார்கள்.
5. சரி, மகனே பிறக்கவில்லை அல்லது, பிறந்ததும் உதவாக்கரையாகிவிட்டது என்றால், அடுத்து அந்தத் தாய் என்ன செய்வாள்? தனக்குப் பிறந்த மகளையே மகன் மாதிரி வளர்த்து, அந்தப் பெண்ணை 'the man of the family' என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தி, ஒட்டுண்ணி மாதிரி மகளை உறிஞ்சி வாழ்வாள் தாய்.
6. இதில் எந்த வழியும் வேலை செய்யவில்லை என்றால் கடைசி கட்டத்தில் பெண்ணே கோதாவில் குதித்து, சுயமாகப் போராட ஆரம்பித்துவிடுவாள். தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, பவர் தேவையைத் தானே சுயமாகப் பூர்த்திசெய்துகொள்ளும் பெண்களைக் கண்டு வியப்போம் அல்லது, 'சே, பொம்பளையா அடக்க ஒடுக்கமா இருக்காளா'னு மிகத் துச்சமாக விமர்சிப்போம். ஆனால், அம்மா சென்டிமென்ட் என்னும் பிரம்மாஸ்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பெண்களைப் பார்த்தால் கை எடுத்துக் கும்பிடுவோம்.
|