என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

மதுரையில் பெப்சி உமா!

மதுரையில் பெப்சி உமா!

பறந்து போன மதுரை மாப்பு...

மதுரையில் பெப்சி உமா!

டந்த நான்கு ஆண்டுகளாக மதுரை மக்களின் காலை நேரத்தை கலர்ஃபுல் ஆக்கிய குரல், பிரியாவிடை பெற்றுவிட்டது. ரேடியோ மிர்ச்சியின் மதுரை மாப்பு ஆண்ட்ரூஸ்தான் அவர்! ஆண்ட்ரூஸ் விலகல் செய்தியைச் சொன்னதும், ஏராளமான நேயர்கள் 'நீங்க போகக் கூடாது ஆண்ட்ரூஸ்’ என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்கிறார் ஆண்ட்ரூஸ்?

''மிர்ச்சியில் நிகழ்ச்சியோடு சேர்ந்து நல்ல விஷயங்கள் செஞ்சதை மறக்க முடியாது. செல்லூர் மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றவெச்சது, 10 ஆயிரம் மரக் கன்றுகள் நட்டதுன்னு பல நல்ல விஷயங்களைச் செய்ய நானும் ஒரு கருவியா இருந்திருக்கேன். கல்லூரி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, நிறைய மாணவர்கள், 'ஆர்.ஜே. ஆவது எப்படி?’ன்னு கேட்பாங்க. ஏற்கெனவே இருக்கிறவங்க இடம் கொடுத்தால்தானே புதுப் பசங்க இடம் பிடிக்க முடியும். அதான், நான் என் இடத்தை விட்டுக்கொடுத்துட்டேன். இப்போ 'காவியன் குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ல பி.ஆர்.ஓ-வா இருக்கேன். மிர்ச்சியில் சாதிச்சதைப் போலவே இந்தப் புதிய வேலையிலும் நிச்சயமா சாதிப்பேன்!'' - நம்பிக்கையாகச் சிரிக்கிறார் ஆண்ட்ரூஸ்!

- கே.கே.மகேஷ், படம்: ஜெ.தான்யராஜு

ராஜபாளையம் கவிதா!

மதுரையில் பெப்சி உமா!

ராஜபாளையம் லோக்கல் சேனல் வரலாற்றில் முதல் தொகுப்பாளினி - கவிதா! வசந்தம் டி.வி-யின் தொகுப்பாளினி. பண்டிகை நாட்களில் நகைக் கடைக்காரர்கள் நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்வார்கள். அப்போது, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை புதுப் புது நகைகள் அணிந்து தொகுத்து வழங்குவது கவிதாவின் வழக்கம். இதனால், பண்டிகைக் காலங்களில் கவிதாவின் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குப் பெருங்கும்பல் காத்திருக்கும். கவிதாவுக்கு ஊருக்குள் அப்படி ஒரு மவுசு!  

- எம்.கார்த்தி, படம்: என்.ஜி.மணிகண்டன்

மதுரையில் பெப்சி உமா!

மதுரையில் பெப்சி உமா!

துரை 'ஆல்பா’ சேனலின் காம்பியர் நோபல் குமாரி கிரேஷி. சாயலில் நடிகை சுவலட்சுமி போல இருப்பதால், கிரேஷிக்கு செம கிரேஸ்!

''நான் திருநெல்வேலிப் பொண்ணு. என் அப்பா, அம்மாவுக்கு நான் நோபல் பரிசு வாங்கணும்னு ஆசை. அதனால், 'நோபல்’னே எனக்குப் பேர்வெச்சுட்டாங்க. காம்பியர் வேலையில் 'பெப்சி’ உமாதான் என் ரோல் மாடல். அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்குவேஜைக் கவனிச்சு, அப்படியே பேச ஆரம்பிச்சேன். அதனால, எனக்கு 'குட்டி பெப்சி உமா’ன்னு ஊருக்குள் பேர்!'' என்று சிரிக்கும் கிரேஷிக்கு, ஐஸ்க்ரீம் என்றால் உயிர்!

- பூ.ஜெயராமன் படம்: கா.கார்த்திக்

மதுரையில் பெப்சி உமா!