என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்!''

''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்!''

''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்!''
##~##
செ
ன்னை, மயிலாப்பூர் அகாடமியின் சார்பில், ஆந்திர மகிள சபா, க்ளார்க் காது கேளாதோர் பள்ளி, அவ்வை இல்லம் போன்றவற்றைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற மாணவர்களுடன் 'நேருக்கு நேர்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகர் கமல்ஹாசன்.

''என்னைப் பொறுத்தவரையில் நீங்க ஊனமுற்றவங்க இல்லை. இந்த இருபதாம் நூற்றாண்டில் உங்களை உடல் ஊனமுற்றவர்கள்னு யாராவது சொன்னா, அவங்க தேசத் துரோகிகள்!'' என்று உணர்ச்சிவசப்பட்ட கமலிடம் மாணவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டனர்.

''அப்புவா நடிச்சது, எப்படி?''

''தொப்பிக்குள்ள இருந்து புறா எப்படி வருதுன்னு கேட்டா, மந்திரவாதி சொல்ல மாட்டான். அந்த மாதிரி தான் இதுவும். ஆனா, இதுல மந்திரம் இல்லை... தந்திரம் தான்!''

''நீங்க ஊனமுற்றவரா நடிச்சிருக்கீங்களா?''

''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்!''

''நடிச்சிருக்கேன்... அதாவது படிக்காதவனா!''

''உங்கள் இளமையின் ரகசியம் என்ன?'' என்று ஒரு பெண் கேட்க...

''பத்து வருஷம் கழிச்சு நீங்க இதே கேள்வி கேட்டா பத்தாயிரம் ரூபா தரேன்!'' என்றார் கமல்.

''நீங்க என்னை அப்போ ஞாபகம் வெச்சிருப்பீங் களா?'' என அந்தப் பெண் எதிர்க் கேள்வி கேட்டார்.

கமல் புன்முறுவல் பூத்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பெண் கமலிடம், ''என் பெயர் ஞாபகம் இருக்கா?'' என்றார்.

''ஞாபகம் இல்லையே...'' என யோசித்தார் கமல்.

''பத்து நிமிஷத்திலேயே இப்படி... பத்து வருஷம் கழிச்சு மட்டும் எப்படி ஞாபகம் இருக்கும்?''

''பத்து வருஷம் கழிச்சு நீங்க வந்தா, 'பிரேமாவதி’ன்னு கரெக்டா சொல்லுவேன்!'' என கமல் குறும்புடன் அவரை மடக்க, மாணவர்கள் கை தட்டலில் குஷி!

- சு.பானுமதி