என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''கேப்டனோட செம ஜாலி!''

''கேப்டனோட செம ஜாலி!''

##~##
ரா
திகா, ரசிகா, சீமா... சேலத்தின் திருநங்கை கள். கேலி, கிண்டல் இல்லாமல் செல்லும் இடம் எல்லாம் 'சிறப்பு விருந்தினர்’ கௌரவம் பெறுபவர் கள். கேப்டனுடன் 'விருதகிரி’ படத்தில் நடித்த கதை கேட்டதும் 'கோரஸாக’ வெட்கப்படுகிறார்கள்!

''ஷூட்டிங் கிளம்புறப்போ, 'என்னத்த நடிக்கப் போறோம். சிங்கமாட்டம் கேப்டனைப் பக்கத்துல பார்த்தாலே கை, கால் உதறுமே’ன்னு பயம் வந்துச்சு. ஆனா, நேர்ல பார்த்ததும் கேப்டன் 'எல்லாரும் சாப்டீங்களாப்பா?’னு சகஜமாப் பேச ஆரம்பிச்சுட்டாரு. கடை கடையா ஏறி இறங்கி பதாய் (பணம்) கேட்கிற எங்க பழக்கத்தை ஷூட் பண்ணாங்க. நாங்க சொதப்புனோம். ஆனா, கேப்டன் கொஞ்சம்கூட டென்ஷன் ஆகாம, அவரே நடிச்சுக் காண்பிச்சாரு. திருநங்கை மாதிரி ரெண்டு கையையும் தட்டிக்கிட்டு, ஆக்டிங் கொடுத்தாரு. அவருக்கு வளையுறதும், குழையுறதும் நல்லாவே வருது!'' என்று ஆச்சர்யப்படுகிறார் ராதிகா.

''கேப்டனோட செம ஜாலி!''

டேக் சமயம் கண்டிப்பாக இருக்கும் விஜயகாந்த், பிரேக் சமயம் ரொம்பவே குறும் பாகக் கலாய்ப்பாராம். ஓர் இடைவெளியில் 'நம்ம கட வீதி கலகலக்க... என் அக்கா மக அவ நடந்து வந்தா!’ என்ற பாடலை ஒலிக்க விட்டு, விஜயகாந்த் ஸ்டெப்ஸ் போட, ஏரியாவில் கலகல களை.

''சிக்கன், மட்டன்னு வகை வகையா சமைச்சு தரச் சொன்னவர், சமயங்கள்ல அவரே வாளியைத் தூக்கிட்டு இறங்கிடுவாரு. 'நல்லி எலும்பை நல்லாக் கடிச்சுச் சாப்பிடும்மா. உடம்புக்குச் சத்து’னு இலை நிறைய அடுக்கிருவாரு!'' என்கிறார் ரசிகா. ஆங்..!  

- எஸ்.ஷக்தி, படம்: எம்.விஜயகுமார்