மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்னொரு பகுதியான டாப்சிலிப்பின் கதை வேறு. ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிருந்து மரங்களை வெட்டி எடுத்துச் சென்றபோது அதைக் கண்காணிக்க வந்தவர் 'க்யூகோ வுட்'. மரங்களை அடியோடு வெட்டாமல் அடிமரத்தின் ஓரிரு அடிகளைவிட்டு விட்டு வெட்டும் முறையை அறிமுகப்செய்தவர் இவர்தான். மரங்கள் மீது க்யூகோ வுட்டுக்கு அளப்பரிய காதல். காட்டுக்குள்ஊன்று கோலை ஊன்றி நடக்கும்போது, சிறுகுழி ஏற்படுத்தி அதில் ஒரு தேக்கு மர விதையைப் போடுவது அவரது வழக்கம். இப்போது டாப்சிலிப்பில் இருக்கும் அடர் காடுகளுக்கு க்யூகோ வுட்டின் உழைப்பும் ஒரு காரணம். 'தான் இறந்தபின் அதே காட்டில்தான் தன்னைப் புதைக்க வேண்டும்' என உயில் எழுதியிருந்தார். இப்போதும் டாப்சிலிப் மலையின் சரிவு ஒன்றில் மரச் சருகுகளை விலக்கினால் க்யூகோ வுட்டின் கல்லறையை நாம் பார்க் கலாம்!
வீ.ஜெ.சுரேஷ், ந.வினோத்குமார்
|