சில கதாபாத்திரங்களை இத்தாலிய வரலாற்றில் இருந்து எடுத்தார் என்பதே சரி! அவருடைய நாடகங்களில் வந்த ஜூலியஸ் சீசர், ஆண்டனி, கிளியோபாட்ரா போன்றவர்களைப்பற்றிய தகவல்கள், ப்ளூடார்க் எழுதிய வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டவைதான். அதனால் என்ன? வால்மீகியின் (சம்ஸ்கிருத) ராமா யணத்தைப் படித்துவிட்டுத்தான் கம்பர் ராமாயணம் எழுதினார். இருப்பினும், அது தனித்தன்மை மிகுந்த ஒப்பற்ற காவியமாகத்தானே கருதப்படுகிறது!
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் நிகரில்லாதவை. ஒருமுறை, 'மிகச் சிறந்த நாடகாசிரியர் யார்?' என்று ஒருவர் கேட்டதற்கு, 'நகைச்சுவை நாடகம் (Comedy), சோக நாடகம் (tragedy) இரண்டையும் பிரமாதமாக எழுதுகிறவர்தான். ஆனால், அப்படி யாருமில்லை!' என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் மட்டுமே அதைச் சாதித்துக் காட்டினார்! ஆங்கில மொழிக்கு (இன்றைக்கும் நாம் பயன்படுத்தும்) 1,800 புதிய வார்த்தைகளை உருவாக்கித் தந்தவர் ஷேக்ஸ்பியர் என்பது உங்களுக்குத் தெரியுமா?!
|