ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

கதவுக்கு நேரே கால் நீட்டாதே!

கதவுக்கு நேரே கால் நீட்டாதே!

கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!

ரணத்தை மட்டும் விட்டுவைப்பார்களா மனிதர்கள்? அங்கேயும் ஆணி அடித்துக் காத்திருக்கிறது சில சென்டிமென்ட்டுகள். 'வீட்டுக்குள் குடையை விரிக்கக் கூடாது' என்பது அமெரிக்கா உள்பட பல மேலை நாட்டிலும் நிலவும் சென்டிமென்ட். அப்படி விரித்தால் வீட்டில் இருக்கும் யாராவது பொட்டென்று போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை.

குடை போகட்டும்... தொப்பியைக்கூட படுக்கையில் வைக்க மாட்டார்கள். படுக்கையில் தொப்பியை வைத்துக்கொண்டு தூங்கக் கூடாது. எழுந்திருக்கும்போது வீட்டில் இருப்பவர்களில் யாராவது நிரந்தரத் தூக்கத்துக்குப் போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை.

ஹவாய் தீவில் உள்ள மக்கள் கதவுக்கு நேராகக் கால் நீட்டிப் படுக்கவே மாட்டார்கள். காரணம், நம்மை அறியாமலேயே இரவில் உயிர் கால் வழியாக இறங்கி, வாசல் வழியாக வெளியே போய்விடுமாம்.

கல்லறைத் தோட்டத்தைக் கடக்கும்போது மூச்சைப் பிடித்துக்கொண்டு விரைவாகப் போகவேண்டும். இது அமெரிக்கர்களிடம் முன்பு இருந்த ஒரு சென்டிமென்ட். காரணம் ரொம்ப சுவாரஸ்யமானது. அதாவது, செத்துப்போனவர்களுக்கு நம்மைப் பார்த்துப் பொறாமை வருமாம். தன் மூக்கைத் தொட்டுப் பார்த்து, 'அவனுக்கு

கதவுக்கு நேரே கால் நீட்டாதே!

மட்டும் மூச்சிருக்கு, எனக்கு இல்லையே?' என்று கோபப்பட்டு, பொளேரென அறையும். உங்களுக்கும் மூச்சு நின்றுவிடும். அதற்காகத்தான் இந்த 'தம்'பிடி சென்டிமென்ட்.

நம்ம கிராமங்கள் பலவற்றில் போலவே, ஜப்பானியர்களும் வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுக்கவே மாட்டார்கள். அவர்களுடைய சென்டிமென்ட்படி வடக்கு என்பது இறந்தவர்களின் திசை. இறந்தவர்களை வடக்குப் பக்கம் தலை இருப்பது மாதிரிதான் புதைப்பார்கள். அதனால் வாழ விரும்புபவர்கள் வடக்குப் பக்கம் திரும்பவே மாட்டார்கள். ரயில் பெர்த்தில் படுத்திருக்கையில் தள்ளாடும் பார்ட்டிகள் என்ன பண்ணுவாங்களோ?

பக்திதாரா!

கதவுக்கு நேரே கால் நீட்டாதே!

தனது படத்துக்கான அவுட்டோர் ஷூட்டிங்கில் இருந்தால் அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சர்ச்சுகள், கோயில்களுக்குச் சென்றே ஆக வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் சென்டிமென்ட். அப்படி கோயில், குளம் என்று ஏறி இறங்குவதால்தான் தான் நடித்த படங்கள் வெற்றிபெறுகின்றன என்று நம்புகிறார்!

 
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!
-சேவியர்
கதவுக்கு நேரே கால் நீட்டாதே!