ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

காரியக்கார சென்டிமென்ட்!

காரியக்கார சென்டிமென்ட்!

காரியக்கார சென்டிமென்ட்!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
காரியக்கார சென்டிமென்ட்!
காரியக்கார சென்டிமென்ட்!
காரியக்கார சென்டிமென்ட்!
காரியக்கார சென்டிமென்ட்!
காரியக்கார சென்டிமென்ட்!

ள்ளூர் தொடங்கி உலக அளவிலான வி.ஐ.பி-க்கள் வரை சென்டிமென்ட்களும் சுவாரஸ்யமானவை.

காரியக்கார சென்டிமென்ட்!

நரசிம்மராவ், தேவகவுடா:

'எட்டு மொழிகள் தெரிந்த வித்தகர், சாணக்கியன்' என்றெல்லாம் பெயர் எடுத்தவர் நரசிம்மராவ். ஆனால், ஆள் பயங்கர ஜோதிடப் பித்தர். நரசிம்மராவுக்கு ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் இருந்தார். எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுப்பார். தேவகவுடாவும் இதேபோலத்தான். அவரது ஜோதிடரின் பின்னால் பெரிய கூட்டமே அலையும். 'இவரைப் பிடித்து அவரைப் பிடிக்கலாம்' என்பது கணக்கு. கர்நாடகாவில் 'ஆளுக்கு ஆறு மாசம்' ஒப்பந்த அடிப்படையில் தேவகவுடாவும், பா.ஜ.க-வின் குமாரசாமியும் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொண்டார்களே நினைவு இருக்கிறதா? தன் ஆறு மாதம் முடிந்ததும் குமாரசாமிக்கு முதல்வர் பதவியைக் கொடுக்க மறுத்தபோது, அதற்கு தேவகவுடா சொன்ன காரணம், 'உங்களுக்கு இப்போது கிரக நிலை சரி இல்லை. கொஞ்ச காலம் போகட்டும்.' எவ்வளவு காரியக்கார சென்டிமென்ட் பாருங்கள்!

ஒபாமா, மெக்கெய்ன்:

பொதுவாக, புராணக் கதைகள் என்றால் எழுந்து போய்விடும் அமெரிக்கர்கள், 'சயின்ஸ் ஃபிக்ஷன்' என்று ஜல்லியடித்தால் நம்பிவிடுவார்கள். இதைச் சரியாகப் புரிந்துகொண்டவர் ஜிம்மி கார்ட்டர், 'பிரசாரத்துக்குப் போகும்போது வானத்தில் நிலா சைஸில் நீல நிறத்தில் ஒரு விண்கலத்தைக் கண்டேன். நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் நிச்சயம் நாசாவில் இருக்கும் அனைத்து உண்மைகளையும் உங்கள் பார்வைக்கு வைப்பேன்' என்று அவர் எய்த சென்டிமென்ட் அம்பும் அவரை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைக்க ஒரு காரணமானது.

எங்கே போனாலும் அமெரிக்காவின் சின்னமான கழுகு, மேரி மாதாவோடு ஆஞ்சநேயரின் மினி சிலையும் ஒபாமாவிடம் இருக்கும். தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட மெக்கெய்ன் கடற்படையில் வேலை பார்த்தவர் என்பதால், மாலுமிகளுக்கே உரித்தான சென்டிமென்ட்படி, எங்கு சென்றாலும் ஒரு காம்பஸை எடுத்துச் செல்வாராம்!

ஜிம் லேடி!

காரியக்கார சென்டிமென்ட்!

'தினமும் ஜிம்முக்குச் சென்று எக்சர்சைஸ் செய்தால்தான் அன்றைய பொழுது சிறப்பாக இருக்கும். மனதில் நினைத்தது நடக்கும்' என்பது பூனம் பஜ்வாவின் சென்டிமென்ட்!

 
காரியக்கார சென்டிமென்ட்!
-வேல்ஸ்
காரியக்கார சென்டிமென்ட்!