ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

தும்மினால் சொர்க்கம்!

தும்மினால் சொர்க்கம்!

தும்மினால் சொர்க்கம்!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
தும்மினால் சொர்க்கம்!
தும்மினால் சொர்க்கம்!
தும்மினால் சொர்க்கம்!
தும்மினால் சொர்க்கம்!
தும்மினால் சொர்க்கம்!
தும்மினால் சொர்க்கம்!

யாராவது தும்மினால் 'ப்ளெஸ் யூ' (கடவுள் உனக்கு ஆசி வழங்குவாராக!) என்று சொல்வது அமெரிக்கர்களின் வழக்கம். அதாவது தும்மும் போது உங்கள் ஆன்மா எஸ்கேப் ஆக முயலுமாம். அப்போது யாராவது வாழ்த்தினால் சாந்தமாகி மீண்டும் உள்ளே போய்விடுமாம்.

தும்மும்போது உடலில் இருந்து அசுத்த ஆவி வெளியேறும் என்பது இங்கிலாந்தின் பழைய நம்பிக்கை. 'ஆஹா... ஒரு ஆவி வெளியேறிடுச்சா, வாழ்த்துக்கள்' என சொல்லத் துவங்கினார்களாம். அப்புறம், பிளேக் நோய் தாக்கிய காலத்தில்வாழ்த் தின் பொருள் மாறியது. தும்முபவர்கள் சாகப் போகிறார்கள் என நினைத்து வாழ்த்தினார்கள். 'கடவுள் உனக்கு ஆசி வழங்கட்டும்... நீ சொர்க்கம் போ' என்று அர்த்தம்.

இதையெல்லாம் கேட்டுச் சிரிக்கும் சிலர், 'தும்மும்போது இதயம் ஒரு விநாடி துடிக்காமல் நின்றுபோகும். மீண்டும் அதைத் துடிக்கவைக்கத்தான் வாழ்த்துகிறார்கள்' என்று புதுக் காரணம் சொல்கிறார்கள். நம்மூரில், சாப்பிடும்போது புரை ஏறினால்..? 'யாரோ நெனைச்சுக்கறாங்க'!

 
தும்மினால் சொர்க்கம்!
-ரயன்
தும்மினால் சொர்க்கம்!