ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

விசுவாச மனைவி வேண்டுமா?

விசுவாச மனைவி வேண்டுமா?

விசுவாச மனைவி வேண்டுமா?
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
விசுவாச மனைவி வேண்டுமா?
விசுவாச மனைவி வேண்டுமா?
விசுவாச மனைவி வேண்டுமா?
விசுவாச மனைவி வேண்டுமா?
விசுவாச மனைவி வேண்டுமா?
விசுவாச மனைவி வேண்டுமா?

'போர் முனையில் யாராச்சும் சென்டிமென்ட் பார்ப்பாங்களா?' என்று நினைக்கலாம். ஆனால், அங்கேயும் இருக்குது ஆயிரம் சென்டிமென்ட்ஸ்!

இராக்கில் சுமார் 1.5 லட்சம் அமெரிக்க சிப்பாய்கள் துப்பாக்கிகளுடன் திரிகிறார்கள். திடீர் திடீரென சதாம் உசேனின் அபிமானிகளும் உள்ளூர் போராளிகளும் எரிகுண்டுகளை வீசுவதால், ஆக்கிரமிக்க வந்த நாட்டில் குண்டுக்குப் பலியாகிச் சாகிறார்கள் அமெரிக்கச் சிப்பாய்கள். இந்தப் பயத்தினால், பாட்டி கழுத்தில் மாட்டிவிட்ட சிலுவை, பாதிரியார் ஆசி வழங்கிக் கொடுத்த மாதா படம், செல்ல நாய்க் குட்டியின் போட்டோ என்று ஆளாளுக்கு பல சென்டிமென்ட்களைச் சுமந்து திரிகிறார்கள் போர்முனையில்.

ராணுவ வாகனத்தில் எல்லோரும் கும்பலாகச் செல்லும்போது, மைக்கேல் காம்ப்டன் என்பவரின் பையில் இருந்து தவறிக் கீழே விழுந்தது ஒரு சின்னப் பொருள். அழுது அடம்பிடிக்காத குறையாக வாகனத்தை நிறுத்தி அவர் எடுத்து வந்த அந்தப் பொருள், அவர் மனைவியின் ஜட்டி!

எல்லோரும் கிண்டலடிக்க, '' 'இது உன்கிட்ட இருக்குற வரைக்கும்தான் நான் உனக்கு விசுவாசமா இருப்பேன்'னு என் மனைவி சொல்லியிருக்கா'' என்று உண்மையைப் போட்டு உடைத்தார். ம்... எவ்ளோ பெர்சனலான சென்டிமென்ட்!

 
விசுவாச மனைவி வேண்டுமா?
-பி.ஆரோக்கியவேல்
விசுவாச மனைவி வேண்டுமா?