கருணாநிதி:
முக்கியமான சுற்றுப் பயணங்கள்அனைத் தையும் தனது கோபாலபுரம் வீட்டில் இருந்துதான் தொடங்குவார்!
ஜெயலலிதா:
பிரவுன் நிறத்தில் இருந்து பச்சை நிறத் துக்கு மாறியவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்... திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்று இஷ்ட தெய்வங்களையும் மாற்றினார்.வேட் பாளர் பட்டியலை ஏதாவது ஒரு கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து வணங்குவது அம்மாவின் நிரந்தர சென்டிமென்ட்!
விஜயகாந்த்:
மனைவி பிரேமலதா அருகில் இருக்கும்போது எதைத் தொடங்கினாலும் துலங்கும் என்பது கேப்டனின் எண்ணம். சினிமாவுக்குக் கதை கேட்கும்போதுகூட பிரேமலதாவும் கூடவே இருப்பார்!
வைகோ:
கலிங்கப்பட்டியில் இருந்து கிளம்பும்போது தன் அம்மா மாரியம்மாவின் காலில் விழுந்து வணங்கி விட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்!
ஜி.கே.வாசன்:
எப்போதும் தேர்தல் சுற்றுப் பயணத்தை மாங்காடு மாரியம்மன் கோயிலில் தொடங்கி காஞ்சி காமாட்சியை வணங்கி முடிப்பார்!
தங்கபாலு:
ஜோசியம், ஜாதகம், குறி, தாயத்து, வாஸ்து என சகல சென்டிமென்ட்களும் சாருக்கு உண்டு. சத்தியமூர்த்தி பவன் அறைகளை மாற்றி அமைத்தது முதல் அங்கே இருந்த மரங்களை வெட்டியது வரை எல்லாம் இவரது யோசனையே!
ராமதாஸ்:
'தைலாபுரம்' தோட்டத்தில் இருந்து தான் முக்கிய முடிவுகளை அறிவிப்பார். சென்னை உள்பட எந்த வெளியூரிலும் டாக்டரால் 2 நாட்களுக்கு மேல் தங்க முடியாது. மூன்றாவது நாள் காரை தைலாபுரத்துக்கு விரட்டிவிடுவார்!
சரத்குமார்:
வலது கையில்தான் வாட்ச் கட்டுவார். எம்.ஜி.ஆரும் அப்படியேவாம். ஓஹோ!
|