காதலில் எக்கச்சக்க சென்டிமென்ட்ஸ் உண்டு. இதோ சில உலகக் காதல் சென்டிமென்ட் கள்...
காதலிக்கு ஊரில் உள்ளதையெல்லாம் பரிசாகக் கொடுப்பார்கள். ஆனால், பேனா மட்டும் நோ... நோ! பேனாவைப் பரிசளித்தால் காதல் பணால் ஆகிவிடுமாம். ஒருவேளை காதலி மொக்கை கவிதை எழுதுவாள் என்கிற பயமோ? காதலர்களுக்கு பேனா போல, நண்பர்களுக்குக் கத்தி. நண்பனுக்குக் கத்தியைப் பரிசாகக் கொடுத்தால், நட்பு 'சதக்' ஆகிவிடுமாம்.
கொரியாவில் ஷூ சென்டிமென்ட். ஷூவைப் பரிசாகக் கொடுத்தால் காதல் காலாவதி ஆகி விடுமாம். நைஸாகக் கழற்றிவிட நினைக்கும் காதலர்களுக்கு இதுதான் பிரிவு சிம்பல். ஒரு ஜோடி ஷூவைப் பார்சல் பண்ணிவிடுவார்கள். அப்புறம்... அழுது புலம்ப வேண்டியதுதான்!
சீனாவில் ஒரு பெண்ணை வசியம் பண்ண வேண்டுமா? ரொம்ப சிம்பிள்... உங்கள் கால் நகத்தை வெட்டித் தூளாக்கி, ஏதாவது ஒரு ஜூஸில் கலந்து அவளுக்குக் கொடுங்கள். குடித்ததும் மந்திரித்த கோழி மாதிரி அவள் உங்களையே சுற்றிச் சுற்றி வருவாளாம்!
ஸ்பெயினில் எர்மிடா டி சான் இஸிட்ரோ எனும் கோயில் இருக்கிறது. இங்கே ஒவ்வொரு வருடமும் மே 15-ம் தேதி பெண்களின் கூட்டம் கும்மிஅடிக்கும். எல்லாருடைய கையிலும் ஊசி இருக்கும். விரலில் ஊசியால் ஒரு குத்து குத்தி ரத்தம் வர வைப்பார்கள். ஒரு சொட்டு ரத்தம் கோயில் தரையில் விழுந்தால் லவ் சக்சஸ்!
கனவில் பாம்பு வந்து சுற்றிக்கொள்வதாக இளசுகள் கனவு கண்டால் லவ்வாலஜி என்று அர்த்தம். இது இங்கே இல்லை... தாய்லாந்தில். அதனால், இளம் பெண்கள் கனவில் பாம்பு வர இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்கிறார்கள். இளம் பெண்கள் சமைக்கும்போது பாட்டுப் பாடினால் பல் போன கிழட்டு மாப்பிள்ளைதான் |