ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

வலது கை அரித்தால் என்ன ஆகும்?
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
வலது கை அரித்தால் என்ன ஆகும்?
வலது கை அரித்தால் என்ன ஆகும்?
வலது கை அரித்தால் என்ன ஆகும்?
வலது கை அரித்தால் என்ன ஆகும்?
வலது கை அரித்தால் என்ன ஆகும்?
வலது கை அரித்தால் என்ன ஆகும்?

ள்ளூருக்கும் உலகத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்?

'மணமகளே மருமகளே வா... வா... உன் வலது காலை எடுத்துவைத்து வா... வா'ன்னு பாட்டு பாடும் அளவுக்கு இந்தியர்கள் ரொம்பவே 'வலது'சாரிகள். வலது பழக்கம் வளத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை. ரோமானியர்களுக்கும் இதே சென்டிமென்ட் உண்டு. வீட்டுக்குள் நுழையும்போது வலது காலை எடுத்துவைத்துத்தான் நுழைவார்கள். இங்கிலாந்துக்காரர்கள் இன்னும் ஒரு படி மேலே. செருப்பு போடும்போது, முதலில் வலது காலைத்தான் உள்ளே நுழைப்பார்கள். ஆயுள் நீளுமாம். (எது செருப்போட ஆயுளா?)

வீட்டுக்குள்ளே செருப்பு போட்டு நடப்பது நம்மூரில் புனிதத்துக்கும், சுத்தத்துக்கும் எதிரான சென்டிமென்ட். தாய்லாந்திலும் இதே சென்டிமென்ட் உண்டு. செருப்புக்

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

காலுடன் வீட்டுக்குள் நுழைவது தாய்லாந்தில் அவமானச் சின்னம். மீறி நுழைந்தால், 'செருப்பு பிஞ்சிடும்' என்று வரவேற்பு கிடைக் கும்.

அதே போல வலது கையால்தான் எதையும் கொடுக்க வேண்டும் என்கிற நமது சென்டிமென்ட்டும் தாய்லாந்தில் ரிப்பீட்டு. அங்கே வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். இடது கை, வலது கை மணிக்கட்டைப் பிடித்திருக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால்தான் மரியாதை. கொடுப்பவருக்கும் நல்லது, வாங்குபவருக்கும் பயன் தருமாம்.

'உள்ளங்கை அரிக்குது... இன்னிக்கு வருமானம் வரும்' என்று நாம் கையைச் சொறிவது போல துருக்கி ஆசாமிகளும் சொறிவார்கள்.

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

அவர்களுடைய சென்டிமென்ட்படி, இடது கை அரித்தால் பணம் வரும். வலது கை அரித்தால் உள்ளதும் போய்விடும்.

'பூனை குறுக்கே வந்துடுச்சு... போன காரியம் வெளங்கினாப்லதான்' என்று அமெரிக்காவிலும் பின்வாங்குகிறார்கள். அதுவும் கறுப்புப் பூனை வந்தால் உடனே யு டர்ன் எடுத்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஏனெனில், அங்கே கறுப்புப் பூனை என்பது சாத்தானின் குறியீடு!

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

யாராச்சும் படுத்திருந்தா, அவர்களைத் தாண்டிப் போகக் கூடாது என்கிற நம் சென்டிமென்ட் அமெரிக்காவிலும் உண்டு. அதுவும் குழந்தைகள் படுத்திருந்தால், தாண்டவே கூடாது.

கொரியக்காரர்களும் இரவு நகம் வெட்ட மாட்டார்கள். ஏனெனில், நகம் என்பது உடலின் ஒரு பாகம். அதை இரவு நேரம் வெட்டினால் எலிகள் நகத்தைத் தின்றுவிடுமாம். அதனால், உங்கள் ஆன்மா கொஞ்சம் குறைந்து விடுமாம்.

'ஆஹா! பல்லியே கத்திருச்சு' என்று பரவசப்படும் இந்தியக் குணம் இந்தோனேஷியாவிலும் உண்டு. அங்கே கெய்கோ

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

எனும் சிறு பல்லி சத்தம் கேட்டால் மக்கள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் 'குழந்தை பிறக்கும்போது பல்லி கத்தினால் சுகப் பிரசவம் ஆகும்' என்பது நம்பிக்கை. சுபம்!

 

யோகலட்சுமி!

வலது கை அரித்தால் என்ன ஆகும்?

வீட்டைவிட்டு வெளியே வரும்போது முதலில் கண்ணில் படும் போஸ்டர், பேனரில் உள்ள வாசகங்கள் தனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை விஜயலட்சுமிக்கு உண்டு. ஆக்கர் ஸ்டுடியோவிலிருந்து 'சுல்தான் தி வாரியர்' படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது விஜயலட்சுமி காலையில் போஸ்டரில் பார்த்த முதல் வாசகம் ஜாக்பாட்!

 
வலது கை அரித்தால் என்ன ஆகும்?
-சேவியர்
வலது கை அரித்தால் என்ன ஆகும்?