ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

''நான் நாராயணன் பேசறேன்..!''

''நான் நாராயணன் பேசறேன்..!''

''நான் நாராயணன் பேசறேன்..!''
விகடன் பொக்கிஷம்
''நான் நாராயணன் பேசறேன்..!''
''நான் நாராயணன் பேசறேன்..!''
''நான் நாராயணன் பேசறேன்..!''
''நான் நாராயணன் பேசறேன்..!''
''நான் நாராயணன் பேசறேன்..!''
''நான் நாராயணன் பேசறேன்..!''
''நான் நாராயணன் பேசறேன்..!''

ம்பர் 15, பிள்ளையார் கோயில் தெரு, அரக்கோணம்... சாதாரணமாக, எளிமையாக இருக்கிறது இந்த வீடு... புது ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைப் போல!

ஆமாம்... கேரளத்தில் வாழும் அவரது ஒரு சகோதரி கௌரி யைத் தவிர, இன்னொரு சகோதரி கே.ஆர்.பாரதியின் வீடு இது. சிறிய ஓட்டு வீடு. திடீரென்று இரண்டு, மூன்று விருந்தாளிகள் வந்தால்கூட இடநெருக்கடி ஏற்பட்டு விடும்!

ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் கணவர் நீலாங்காட் கருணாகரனுடன் வசித்து வரு கிறார் பாரதி.

''எங்கள் கல்யாணத்துக்கான மொத்தச் செலவையும் 'குஞ்சேட் டன்'தான் செய்தார்!'' என்கிறார் பாரதி. சின்ன அண்ணனை மலையாளத்தில் குஞ்சேட்டன் என்பார்களாம்.

''கல்யாணம் ஆன கொஞ்ச வருஷத்துல, 69-ல அரக்கோணம் வந்துட்டோம். குஞ்சேட்டன் இங்க நிறைய முறை வந்திருக்கு. சென்ட்ரல் மினிஸ்டரானதுக்கு அப்புறம், முன்னால மூணு கார், பின்னால மூணு கார்னு குஞ்சேட் டன் வரும். அதற்கப்புறம் துணை ஜனாதிபதி ஆன பிறகும் இரண்டு மூணு முறை வந்திருக்கார். பாது காப்புப் பிரச்னையால வர்றது குறைஞ்சுபோச்சு. அண்ணி உஷா வுக்கு மிகவும் பிடிச்சது முறுக்கு. மெட்ராஸ்ல வந்து ராஜ்பவன்ல அவங்க தங்கியிருக்கும்போது எப்ப சந்திச்சாலும் நான் முறுக்கு கொண்டுபோய் கொடுப்பேன். குஞ்சேட்டனுக்குப் பாசிப் பயிறு அடை, காராமணி கூட்டு ரொம் பப் பிடிக்கும். இதோ, இப்ப நான் கட்டியிருக்கிற புடவை, போன ஓணம் பண்டிகைக்குக் குஞ்சேட் டன் தபால்ல அனுப்பிச்சது!'' என்று சொல்லிக்கொண்டே வந்த பாரதி அம்மாள் திடீரென்று கண்கலங்கினார்.

''குஞ்சேட்டனுக்கு எங்க உடல் ஆரோக்கியத்துல ரொம்ப அக் கறை. அடிக்கடி போன் செஞ்சு உடல்நலனை விசாரிச்சுட்டே இருக்கும். என் மூத்த மகள் பாலாம்பிகை உடல்நலம் சுகமில் லாம இருந்தா. மெட்ராஸ் ஆஸ் பிட்டல்ல சேர்த்திருந்தோம். குஞ் சேட்டன் அமெரிக்காவிலிருந்து மருந்தை வரவழைச்சுத் தந்தது. தினமும் ரெண்டு மூணு தடவை போன் செய்து விசாரிக்கும். ஆனாலும், காப்பாத்த முடியலை. குஞ்சேட்டன் ஓன்னு அழுது டுச்சு!''

இவர்கள் வீட்டில் போன் கிடையாது. இரண்டு வீடு தள்ளி யிருக்கும் சோமசுந்தரம் என்பவ ரின் வீட்டுக்குத்தான் போன் செய்வாராம் நாராயணன். 'நான் நாராயணன் பேசறேன். ப்ளீஸ்... பாரதியைக் கூப்பிடுங்க...' என்று வரச் சொல்லிவிட்டு, வரும்வரை காத்திருந்து தங்கையுடன் பேசு வாராம்!

 
''நான் நாராயணன் பேசறேன்..!''
-அன்பு வேலாயுதம்
''நான் நாராயணன் பேசறேன்..!''