ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் 'அன்பே வா' வர்ணப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன், கதாநாயகியின் தந்தையாக நடித்து வருகிறார். இதுபற்றி படப்பிடிப்பின் இடைவேளையின்போது தமாஷாக டி.ஆர்.ஆர். குறிப்பிட்டார்.
''என்னை நாடகத்திலிருந்து சினிமாவுக்குக் கொண்டு வந்து காமெடியனாக்கியது ஏவி.எம். அவர்கள்தான். என்னை கதாநாயகயனாக ஆக்கியதும் அவர்தான். அவரேதான் இப்போது என்னை அப்பாவாகவும் ஆக்கியிருக்கிறார்'' என்று சொல்லி, சிறிது இடைவெளிவிட்டு, ''சொல்ல முடியாது, அவர் செஞ்சாலும் செய்வார்!'' என்று சொல்லிச் சிரித்தார் டி.ஆர்.ராமச்சந்திரன்.
''என்ன செய்வார்?'' என்று அவரிடம் கேட்டபோது, ''அதுவா! என்னைத் தாத்தா வேஷம் போட வெச்சாலும் வைப்பார்னு சொல்ல வந்தேன்!'' என்று சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார் டி.ஆர்.ஆர்.
(28-11-65)
|