இப்போதும், ''உங்கள் வயது என்ன?'' என்று கேட்டால் கூச்சப்படாமல் வயதைச் சொல்லி, ''13.8.1963-தான் என் டேட் ஆஃப் பர்த்'' என்பார் ஸ்ரீதேவி.
ஹிந்தி நடிகை ரேகா, ஸ்ரீதேவியின் விசிறி. ரேகா தன் படுக்கை அறையில் ஸ்ரீதேவியின் படத்தைத்தான் மாட்டியிருக்கிறாராம். அந்த அளவுக்கு அவ ருக்கு இவரைப் பிடிக்குமாம்!
ஸ்ரீதேவி வீட்டில் ஓய்வு நேரத்தில் எப்போதும் சுறுசுறுப்பாகத்தான் காணப்படுவார். ஒன்று, சைக்கிள் விட்டுக் கொண்டிருப்பார், அல்லது டான்ஸ் பழகிக்கொண்டு இருப்பார்.
'ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறோம். அதற்கு மேல் படிக்க முடியவில்லையே' என்ற மனக்குறை ஸ்ரீதேவியிடம் உண்டு. ஆனால் வீட்டிலேயே ஆங்கிலம், ஹிந்தி, வீணை, வாய்ப்பாட்டு இப்படிப் பலவற்றை டியூஷன்கள் வைத்துச் சொல்லிக்கொள்கிறார். ஆங்கிலம், ஹிந்தி ஆகியவற்றைச் சரளமாகப் பேசுவார்.
|