இந்த வாரம் இணையம் எப்படி வியாபாரத் தளமாக இயங்குகிறது... அதன் வருங்கால வளர்ச்சி எப்படி இருக்கலாம் என்பதை அலசலாம். மனிதச் சமூகத்தின் மீது இணையத்தின் வீச்சு பரவ ஆரம்பித்த 90-களின் தொடக்கத்தில் இணையத்தின் மீது கட்டப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களை வேறுபடுத்தச் சில வார்த்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
B2C: பிசினஸ் டு கன்ஸ்யூமர். நுகர்வோருக்கு நேரடியாகப் பொருட்களையோ, சேவையையோ விற்கும் ஆன்லைன் நிறுவனம். உதாரணமாக, அமேசான் (new.amazon.com)
B2B: பிசினஸ் டு பிசினஸ். மற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே பொருள்+சேவையை வழங்கும் ஆன்லைன் நிறுவனம். மிகச் சிறந்த உதாரணம்: அலிபாபா (new.alibaba.com).
Click-and-mortar: நேரடியாக நுகர்வோரிடம் தமது பொருள்+சேவை வழங்கிக்கொண்டு இருக்கும் நிறுவனம் ஆன் லைன் மூலமாகவும் வழங்கத் தொடங் கினால், அதன் பெயர் கிளிக்-மார்ட்டர். உதாரணம்: new.walmart.com
'இ-காமர்ஸ்' மாடல்களில் வியாபாரம் என்பது மிக வெளிப்படை. சிறப்பாக வியாபாரம் செய்கிற நிறுவனங்கள் லாபகரமாக இயங்க, வரவைவிட செலவு அதிகம் ஆகக்கூடிய நிறுவனங்கள் திவாலாகும். ஆனால், இ-காமர்ஸ் அல்லாது, பலவித மாடல்களில் இணைய நிறுவனங்கள் கட்டப்பட்டு லாபகரமாக இயங்கிவருவதன் அடிப்படை ரொம்பவும் சிம்பிள் - விளம்பரங்கள்!
முதலில் சில அடிப்படைத் தகவல்கள்
உங்களது கணினித் திரை கோடிக்கணக்கான புள்ளிகளால் ஆனது. பிக்ஸெல் (pixel) எனப்படும் இந்த பிக்ஸெல்களின் வழியாகத்தான் நீங்கள் பார்க்கும் எழுத்துக்களோ, பிம்பங்களோ வெளியாகின்றன. கணினி மட்டுமல்ல, டி.வி, வீடியோ கேம், ஐ-பாட் போன்ற எந்தத் திரையுமே பிக்ஸெல்களால் ஆனதே. மெகா சைஸ் லென்ஸ் ஒன்றைவைத்து கம்ப்யூட்டர் அல்லது டி.வி. திரையை உற்றுப்பார்த்தால், சதுரம் சதுரமாகத் தெரியும் வில்லைகள்தான் பிக்ஸெல்ஸ்.
இந்த பிக்ஸெல்கள் இணைந்த முழுத் திரையை ரியல் எஸ்டேட் என்கி றார்கள். டி.வி-க்கும், இணை யத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், ரியல் எஸ்டேட்டின் அளவு. சீரியல்களுக்கு இடையே மானாவாரியாகக் காட்டப்படும் விளம்பரங்கள் சில நொடிகளே நீடித்தாலும், அவை உங்கள் டி.வி. திரையை முழுமையாக ஆக்கிரமித்துக் காட்டப்படுகின்றன. இணைய தளத்தில் காட்டப்படும் விளம்பரங்களுக்குச் சுருக்கமான ரியல் எஸ்டேட்டே கிடைக் கிறது. ஆனாலும், இணைய விளம்பரஉலகம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. பெப்சி போன்ற மெகா நிறுவனங்கள் டி.வி. ஊடகத்துக்கு நிகராக, இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
|